எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட முந்திரி பழம்!

எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட முந்திரி பழம்!

முந்திரி பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. உடலின் பி. எச். அளவினை பராமரிக்கிறது. இப்பழத்தின் தோலில் உள்ள பெக்டின் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.

* இப்பழத்தில் காணப்படும் தனித்துவமான ஃப்ளவனாய்டுகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதுடன் அதனை சீராக செயல்பட வைக்கின்றன.

இப்பழத்தின் சாற்றினை முறையாக பயன்படுத்துபவர்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளிருந்து நிவாரணம் பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு நுரையீரல் செயல்பாட்டினை சீராக்கலாம்.

* இப்பழமானது இதய நலத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிஜென்டுகள், பாலிபீனால்கள், ஃப்ளவனாய்டுகள் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.

இப்பழத்தில் காணப்படும் அதிகளவு பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை மாரடைப்பு உள்ளிடவைகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே இதய நலத்தை பேணவிரும்புபவர்கள் இப்பழத்தினை உண்ணலாம்.

* இப்பழமானது கல்லீரல் உட்பட உடலின் எல்லா பாகங்களையும் சுத்தப்படுத்துகிறது. இப்பழத்தின் காரத்தன்மை கல்லீரல் உள்பட உடல் பாகங்களில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற காரணமாகிறது.

* எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை இப்பழத்தில் காணப்படுகின்றன. எனவே இதனை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

* இப்பழத்தினை உண்ணும்போது அவை கொழுப்பினை எரித்து தேவையான ஆற்றலினை வழங்குகின்றன. இப்பழத்தினை உண்டு உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு கொழுப்பானது எரிக்கப்படுகிறது. இதனால் கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.

* திகளவு விட்டமின் சி, இப்பழத்தில் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸினால் உண்டாகும் சளி, காய்ச்சல் போன்றவை விரைவில் குணமாவதோடு மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன.

* இப்பழத்தில் காணப்படும் ஃப்ளவனாய்டுகள், பாலிபீனாக்கில்கள் புற்றுச் செல் உருவாவதை தடைசெய்கின்றன. இப்பழத்தினை உண்பதால் நுரையீரல் உள்ளிட்ட இடங்களில் புற்றுநோய் உருவாவது தடுக்கப்படுகிறது.

* மலச்சிக்கலானது கழிவில் உள்ள நீர்ச்சத்தினை பெருங்குடல் உறிஞ்சும்போது உண்டாகிறது. இப்பழமானது "சார்பிட்டால்" என்ற வேதிப்பொருளைக் கொண்டுள்ளது.

இப்பொருளானது பெருங்குடலினை அடையும் போது பெருங்குடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை வழங்கி மலத்தினை இளக்கி எளிதில் வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் தீரும். எனவே மலச்சிக்கல் வராதிருக்க இப்பழத்தினை உண்ணலாம்.

* ப்பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமத்தில் உண்டாகும் வீக்கம், அரிப்பு, சுருக்கம் மற்றும் வெடிப்பு ஆகியவற்றைப் போக்குகிறது.

கேசத்தில் இப்பழச்சாற்றினை தேய்க்கும்போது பொடுகு உள்ளிட்ட கேசப்பிரச்சினைகள் தீருகின்றன. சருமம் மற்றும் கேசத்திற்கு பயன்படுத்தும் கிரீம்கள், சாம்புகள் உள்ளிட்டவைகளின் தயாரிப்பில்; இப்பழச்சாறு பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் தான் அதிகம் இருக்கும். ஆனால் அதை விட 5 மடங்கு அதிகமாக ஒரு முந்திரி பழத்தில் உள்ளது என்றால் பாருங்களேன். எனவே இனிமேல் 5 ஆரஞ்சு சாப்பிடுவதற்கு பதில் ஒரு முந்திரிப்பழத்தை சாப்பிடுங்கள்.

* நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதனை குணமாக்கலாம்.

* முந்திரி பழத்தை சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

24 மணிநேரம் முந்திரி பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் அழுகி விடும். அதனால் தான் இப்பழம் இந்தியாவில் அதிகம் விற்கப்படுவதில்லை. மேலும் இப்பழத்தின் ஜூஸானது பிரேசிலில் மிகவும் பிரபலமானது.

சாப்பிடும் முறை முந்திரி பழத்தை சாப்பிட்டால், தொண்டையில் கரகரப்பு ஏற்படாமல் இருக்க, அதனை வேக வைத்தோ அல்லது உப்பு நீரில் ஊற வைத்தோ சாப்பிட வேண்டும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com