மூட்டு வலியை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் காலிஃபிளவர்!

காலிஃப்ளவரில் வைட்டமின் ஏ, பி, சி, இ, கே ஆகியவை அதிகம் உள்ளன.
காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.
காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல், உடலை காக்க உதவுகின்றது.
காலிஃபிளவரில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. வாரத்திற்கு இரண்டு முறை காலிபிளவர் பக்குவம் செய்து உணவாக சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது.
மூட்டு வலியை குறைப்பதில் காலிஃபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது.
காலிஃபிளவரை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் நச்சுத்தன்மைகள் நீங்கி உடல் தூய்மை பெறும்.
காலிஃபிளவர்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சிறுநீர் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, சிறுநீரகப் பையில் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது
கர்ப்பிணிகள் இதை உட்கொண்டால் இதில் இருக்கும் போலேட்(folate) மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நரம்பு குழாய் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி, குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகின்றது.
காலிஃபிளவரை சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது.