கொடிய நோய்களை தீர்க்கும் தேங்காய் பூ!

தேங்காய் பூவில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் அதிலுள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய உயிரை பறிக்கும் கொடிய நோய்களுக்கு மருந்தாகிறது. மேலும் இதில் உள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இளநீர், தேங்காய் மற்றும் தேங்காய் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை விட மிக அதிகளவிலான ஊட்டச்சத்துக்களை கொண்டது தேங்காய் பூ.
அதன்படி, இந்த பூவில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட் சருமத்தை பொலிவுடனும், சுருக்கங்கள் இல்லாமலும் இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இந்த பூவில் உள்ள அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இருமடங்காக அதிகரித்து பருவக்கால நோய் தொற்றுக்களை தவிர்க்க உதவுகின்றன.
இது நோய் தொற்றுகளை குணப்படுத்துவதுடன், சிறுநீரகத்தில் உருவாகின்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. உடல் சோர்வடையும் போது, தேங்காய் பூவை சாப்பிட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும். மிக மிக குறைந்த அளவான கலோரியை உடைய இந்த பூவை உட்கொள்ளும்போது, உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கி எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கமுடியும். இந்த பூவில் உள்ள மினரல்களும் விட்டமின்களும், குடலுக்கு பாதுகாப்பை அளித்து மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.
மேலும் இந்த பூ, தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்யும். புற்றுநோய் செல்களை தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிகல்ஸை உடலில் இருந்து வெளியேற்றி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. தினந்தோறும் இந்த பூவை உட்கொண்டு வந்தால், இன்சுலின் சுரப்பு அதிகரித்து, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதய குழாயில் படிகின்ற கொழுப்புகளை நீக்கி மாரடைப்பு ஏற்படாமல் இருக்க இந்த பூ பெரிதும் உதவுகிறது.