முதுமையை தடுக்கும் நெல்லிக்கனி!

முதுமையை தடுக்கும் நெல்லிக்கனி!

ஆரோக்கியத் தகவல்

நாம் உண்ணும் உணவில் உயர் வகை வைட்டமின் சி நெல்லிக்கனியில் தான் உள்ளது. எளிதாக அனைவராலும் வாங்கக்கூடிய நெல்லியில் ஏராளமான பலன்கள் உள்ளது. சிலவற்றை சொல்வதென்றால் நெல்லிக்கனி சர்க்கரையை கட்டுப்படுத்தும். உள்ளுறுப்புகளை பராமரிக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது. ஏற்கெனவே புற்றுநோயின் தாக்கம் இருந்தாலும் செல்களில் பரவவிடாமல் தடுக்கவல்லது. இவை முதன்மை பணிகள். சிறிய நோய்த்தொற்றைக்கூட நம்மை அணுகவிடாமல் காக்கும் திறன் கொண்டது நெல்லிக்கனி.

100கிராம் நெல்லியில் 470மிலி வைட்டமின் சி உள்ளதால் மிகச் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து உடல் அதிக அளவில் டிரைகிளிசரைட்ஸ் கொழுப்பை உறிஞ்சுவதை தவிர்ப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது.

நெல்லியில் காலிக் அமிலம் உள்ளது. கொலஸ்டிரால் கிடையாது. மாவுச்சத்தும் குறைவாக உள்ளது.

நம் உடலின் உள்ள முதன்மையான உறுப்பான கல்லீரலின் நண்பன் என நெல்லியைச் சொல்லலாம். கல்லீரல் அழற்சி, சிரோசிஸ், மஞ்சள் காமாலை போன்ற நோய்களை குணமாக்கும். அதன் செயல்திறனை அதிகரிக்கிறது. கல்லீரலில் உருவாகின்ற சைக்டோகுஷேம்களின் அளவைக் குறைத்து கல்லீரல் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது.

தினமும் ஒன்றிரண்டு நெல்லிக்காய் எடுத்துக் கொள்ள நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்கும்.

தினமும் 15மிலி நெல்லிச்சாற்றில் தேன் கலந்து அருந்தி வர இரத்த சோகை வராது.

உணவு செரியாமைக்கு நெல்லிக்காயை மோரில் கலந்து பெருங்காயம் சேர்த்து பருகிய உணவு எளிதில் ஜீரணம் ஆகும்.

பல்வேறு நன்மைகள் கொண்ட நெல்லிக்கனியை உண்டு ஆரோக்கியம் பேணுவோம். தலைமுடி வளர, கண் பார்வை தெளிவு பெற பித்தத்தைக் தடுக்கக் கூடிய, வாந்தி மயக்கம் என இதன் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். நெல்லியை உண்போம். நலமுடன் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com