மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்!

மாதுளை பழம் வைட்டமின்களின் மிக சிறந்த ஆதாரம் ஆகும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட், வைரஸ் மற்றும் கட்டிகளை எதிர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளன. மாதுளை பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மாதுளை இரத்தத்தில் ஆக்ஸிஜனை பம்ப் செய்ய உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன. மேலும் இது உடலில் இரத்தம் உறைவதையும் தடுக்கிறது.
மாதுளை குருத்தெலும்பு சேதத்தை குறைக்கும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றன.
ஞாபக மறதி அல்லது நினைவாற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு மாதுளை நல்ல மாற்றத்தை தருவதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது
மாதுளை பழங்கள் நார்ச்சத்தின் மிகச்சிறந்த ஆதாரமாகும். இவை செரிமானத்தை எளிதாக்குகின்றன. மேலும் நம் அன்றாட நார்ச்சத்து தேவையில் 45 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன.
மாதுளை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. இது இரத்தத்தை மெல்லியதாக்குகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் இருதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம்.
இன்றைய வாழ்க்கை சூழலில் மன அழுத்தம் ஒரு தவிர்க்க முடியாத உணர்ச்சியாகிவிட்டது. மாதுளை உடலின் உள் அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமின்றி, நமது வேலை அல்லது வேறு காரணங்களினால் ஏற்படும் உளவியல் அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
மாதுளை விளையாட்டு செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும் அதிக உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் வலியை குறைத்து, உடலுக்கு வலிமையை தருகிறது. இது உடற்பயிற்சியால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தையும் குறைக்கிறது.
பாரம்பரியமாக மத்திய கிழக்கிலும் இந்தியாவிலும் சர்க்கரை நோய்க்கான தீர்வாக மாதுளை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இரத்த சர்க்கரையை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.