செம்பருத்தி பூவில் இத்தனை மருத்துவ குணங்களா?

செம்பருத்தி பூவில் இத்தனை மருத்துவ குணங்களா?

நம் எல்லோருடைய வீட்டில் இருக்கக்கூடிய செம்பருத்தி பூவின் பலன் பல உள்ளன. எளிய வீட்டு வைத்தியமாக பக்கவிளைவுகள் ஏதுமின்றி, பத்தியமின்றி பயமில்லாமல் உட்கொள்ளலாம்.

துவர்ப்பு சுவை கொண்ட செம்பருத்தி இதழ்கள் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. உடல் அழற்சி, எரிச்சல், படபடப்பு, கணைச்சூடு, இருமல், தலைவலி போன்றவற்றை போக்கும். ஐந்து செம்பருத்தி பூவின் இதழ்களை 200மிலி நீரில் கொதிக்க வைத்து காலை, மாலை என அருந்தி வர ரத்த அழுத்தம் சீராகும். உயர் ரத்த அழுத்தம் குறைவதுடன், தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.

செம்பருத்தி இலை, காய், இரண்டையும் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஏலக்காய் ஓமம் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு உடனே நிற்கும்.

உடற்சூடு காரணமாக பலருக்கு வாய்ப்புண், வயிற்றுப் புண் உண்டாகும். அவர்கள் தினசரி பத்து பூவின் இதழ்களை மென்று சாப்பிட புண்கள் ஆறும்.

செம்பருத்தி இதனுடன் தாய்ப்பால் அல்லது பசும்பால் சேர்த்து பிழிந்து கண்ணீரில் விட்டால் கண் வலி, எரிச்சல் குணமாகும்.

செம்பருத்தி வேரை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வர கடுமையான ஜுரம் கட்டுப்படும். அதீத தாகத்தையும் போக்கும்.

செம்பருத்தி இதனுடன் துளசி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வர இதயவலி, குத்தல், பிசைவது போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணமாக குணம் தரும்.

செம்பருத்தி பூவின் வெள்ளைக் காம்பை நீக்கி விட்டு ஐந்து இதழ்களை வாயிலிட்டு மென்று சாப்பிட்டு வந்தால் கணைச் சூடால் ஏற்படும் வெள்ளைப்படுதல் நின்றுவிடும். உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பூவை அரைத்து அதிகம் புளிக்காத தயிரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர தோலில் உள்ள வெண்படலம், படை, தேமல் குணமாகும்.

செம்பருத்திக்குயூரினரி இன்ஃபெக்ஷன், கல்லீரல் வீக்கம், காசநோய் போன்றவற்றை குணமாக்கும் வலிமை உள்ளது.

செம்பருத்தி பூவை அரைத்து பாதி எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்தால் வெட்டை நோய் விரைவாக குணமாகும். பிறப்புறுப்பில் அரிப்பு, புண், கட்டி வந்தால் அதையும் குணமாக்குகிறது.

செம்பருத்தி பூவில் கல்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதில் இலவங்கம், ஏலக்காய் சேர்த்து தினமும் இருவேளை குடித்து வர பருவம் எய்தாத பெண்களுக்கு சீக்கிரத்தில் பருவமெய்தும் வேளை வந்து விடும்.

சிறுகுழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமலை சரிசெய்கிறது. இதன் இலைகளை அரைத்து சீகைக்காய் பொடியுடன் கலந்து தலைக்கு குளிக்க முடிக்கு நல்ல பளபளப்பை தந்து ஆரோக்யமாக பாதுகாக்கும்.

செம்பருத்தி டீ, செம்பருத்தி மணப்பாகு என செய்து வைத்துக் கொண்டு சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com