ஐஸ் வாட்டர் எச்சரிக்கை!

ஐஸ் வாட்டர் எச்சரிக்கை!

வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த வெயிலின் கொடூரம் தவறான முடிவெடுக்கத் தோணும். ஆம். வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்ததும் வெப்பக் கொடுமையால் ஐஸ் வாட்டரை குடித்து  விடாதீர்கள். 40 டிகிரி செல்சியஸ் அல்லது 105 டிகிரி அனல்காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயிலினால் இயல்பாவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும் உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக்கு என்று குடிப்போம். அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக் குழாய்கள் வெடித்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

குளிர்ந்த நீர் குடிப்பது இதயத் துடிப்பைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த நீர் குடிக்கும்போது தலையில் உள்ள நரம்புகள் கட்டுபடுத்தப்படுகிறது. இது இதயத் துடிப்பைக் குறைக்கிறது. 

ஐஸ் வாட்டர் குடிப்பது மட்டுமல்ல ஐஸ்வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ, கழுவுவது கூட ஆபத்து என்கிறார்கள். அதாவது உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக் கூடாது என்கிறார்கள். வீட்டிற்குள் நுழைந்து 30 நிமிடங்கள் வரை ஆசுவாசப்படுத்தி வீட்டுக்குள் நிலவும் வெப்பத்துக்கு ஏற்ப நமது உடலை தயார் செய்து விட்டு பிறகுதான் இயற்கையான குளிர் நீரிலோ வெது வெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பம் உள்ள தண்ணீரை குடிக்கலாம்.

குளிர்ந்த நீரைக் குடிக்கும் பழக்கம் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு எரிக்கச் செய்வதை கடினமாக்குகிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்கவும். 

வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர் மற்றும் ஐஸ் போட்டு தண்ணீர் குடிக்காதீர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள். ஐஸ்வாட்டரை தவிர்த்து உடல் நலத்தை பாதுகாப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com