நோய் எதிர்ப்பு சக்தி, ஞாபக சக்தியை அதிகரிக்கும் விளாம்பழம்!

உடலுக்கு வலிமை தரும் பழங்களில் விளாம்பழம் முதலிடத்தில் உள்ளது. இது பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.
பழம், விதைகள், இலை, பட்டை என எல்லாவற்றிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
புரதம், வைட்டமின் சி சத்துகளோடு இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து வைட்டமின் ஏ யும் உள்ளது.
இதை அடிக்கடி சாப்பிட ஞாபக சக்தி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு கொடுக்க, அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு வளருவார்கள்.
வயிற்றுப் போக்கு, சீதபேதியை குணப்படுத்தும். பி-2 உயிர்ச் சத்து இருப்பதால் நரம்புகளையும், இதயத்தையும் பலப்படுத்தும்.
இது தவிர தலைவலி, கண்பார்வை மங்கல், வாய்க்கசப்பு, அதிக வியர்வை, இளநரை போன்ற பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும்.
முக வறட்சி, முக சுருக்கம் இவற்றைப் போக்கி தோலை மிருதுவாக்கும். கூந்தலை பளபளப்பாக்கி சுத்தப்படுத்தும். விளாங்காயை பச்சடி செய்து சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். அல்சரையும் கட்டுப்படுத்தும். விளாம்பழ இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வாயுத் தொல்லை இருக்காது.
இது போன்ற பல பலன்கள் கொண்ட விளாம்பழத்தை சேர்த்து கொள்ள ஆரோக்யம் காக்கலாம்.