காளான் பற்றிய தகவல்களும், பயன்களும்...

காளான் தகவல்கள் :
இப்போதெல்லாம் காளான்கள் சமைப்பது சாதாரணமாகி விட்டது. அது பற்றி சில விஷயங்கள் அறிவோம்.
சில காளான் வகைகள் நச்சுத்தன்மை உடையவை. சில பூண்டு பற்களை காளானுடன் சேர்த்து வேகவைத்தால் அந்த நீர் கருப்பாக மாறிவிடும். அதை சமைக்க கூடாது.
காளான் மீது மஞ்சள் சிறிது தடவி, சிறிது நேரம் கழித்து பார்த்தால், நிறம் கருப்பாக இருக்கும். அதை சமைப்பதை தவிர்க்க வேண்டும்.
பட்டன் காளான்கள் கெடாமல் இருக்க, அவற்றை உப்பு கலந்த நீரில் கொதிக்க வைத்து எடுத்து, வடிகட்டி, ஆற வைத்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.
காளான்களை பிளாஸ்டிக் பைகளில் போடாமல், செய்தித்தாளில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால், கெடாமல் இருக்கும்.
காளான் சமைக்கும் போது சிறிது எண்ணெய் மட்டும் விட்டால் போதும். தண்ணீர் தேவை இல்லை. காளானில் உள்ள தண்ணீரே அது வேக போதுமானது.
காளான் பயன்கள் :
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
தினமும் காளான் சூப் அருந்துவது, பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்த பயன்படுகிறது
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது.
காளான் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல், கொலஸ்ட்ராலின் அளவை சரியான விகிதத்தில் பராமரித்து உடலுக்கு நன்மையை செய்கிறது.
காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. இதில் நிறைதிருக்கும் இரும்புச்சத்துகளை நமது உடல் விரைவாக ஏற்றுக்கொள்வதால் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடு நீங்கும்.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல அலர்ஜி பிரச்சினைகள் இருப்பவர்களும் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.