நல்ல கலரா இருந்தால்தான் மதிப்பா?

நல்ல கலரா இருந்தால்தான் மதிப்பா?

படித்ததில் பிடித்தது!

டலிலேயே பெரிய உறுப்பு நமது சருமம்தான். இது நமது உடலை மூடி, நல்ல தோற்றத்தைக் கொடுத்து, நம்மைக் காத்து, உடல் உஷ்ண நிலையைச் சீராக்கி, நீரை ரெகுலேட் செய்து, உடல் வலி, உணர்ச்சி கொடுத்து, நம்மை தொற்று நோய் அணுகாவண்ணம் காக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி தன்மையை, உருவத்தைக் கொடுப்பதும் நமது சருமம்தான். எல்லோருக்கும் ஒரே மாதிரியான சருமம்தான் இருக்கிறது. ஆனால், நிறத்தைக் கொடுக்கக் கூடிய மெலனின்தான் வேறுபடுகிறது.

சூரிய உஷ்ணம் தேவையான அளவு கிடைத்தால், நமது உடலானது, வைட்டமின் ‘டி’யை உற்பத்தி செய்கிறது. இந்த வைட்டமின் ‘டி’தான் கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள உதவுகிறது. தேவையான அளவு விட்டமின் இல்லாவிட்டால், நமது உடலில் எலும்பு பலவீனமனடைந்து எலும்பு முறிவு ஏற்படலாம். சில சமயம் ரிக்கெட்ஸ் ஏற்படுகிறது. அதிகமான அல்ட்ரா வயலட் சூரிய ஒளியால் சருமப் புற்றுநோய் ஏற்படுகிறது.

சருமத்தின் கீழக, மெலனினை (நிறத்தைக் கொடுக்கும் பொருள்) உற்பத்தி செய்யும் செல்கள் இருக்கின்றன. உடலின் மேல் உள்ள சருமம் மிக மெல்லியதாக இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் நமது உடலிலிருந்து 40,000 இறந்த செல்கள் வெளியேறுகின்றன. ஒரு சதுர அங்குலச் சருமத்தில் 650 வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. 20 ரத்தக் குழாய்களும், 60,000 நிறமிகளும், 50 மில்லியன் பாக்டீரியாக்களும் இருக்கின்றன. வெளுத்த நிறமுடையவர்கள், கருத்த நிறமுடையவர்களைவிட, பத்து பங்கு அதிகமாக சருமப் புற்றநோய்க்கு ஆளாகிறார்கள்.

நமது சருமச் செல்கள் உடலின் மேல்பாகத்துக்கு வந்து 27 நாளைக்கு ஒருமுறை வெளியேறுகிறது. நமது ஆயுளில் ஆயிரம் புதிய சருமங்கள் நமக்கு உற்பத்தியாகின்றன. பரம்பரையும், பரிணாம வளர்ச்சியும் ஒரு மனிதனின் நிறத்தைத் தீர்மானித்து நமது உடலில் ‘மெலனின்’ அதிகமாக இருக்குமானால், சூரிய ஒளியை எடுத்துக் கொண்டு நமது உடலில் சருமப் புற்றுநோய் வராமல் காப்பாற்றும். அதனால் சரும நிறத்தை வைத்து மனிதனின் ஸ்டேட்டஸை நிர்ணயிக்காதீர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com