அதிக பயன்களை கொடுக்கும் கரிசலாங்கண்ணி!

அதிக பயன்களை கொடுக்கும் கரிசலாங்கண்ணி!

நம் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் ஒரு அற்புத மூலிகைதான் கரிசலாங்கண்ணி. வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்பது ஒரு மருத்துவ மூலிகை மற்றும் கீரை செடியாகும். கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகும். மஞ்சள் நிற பூக்கள் இருந்தால் மஞ்சள் கரிசலாங்கண்ணி என்றும், வெள்ளை நிற பூக்களை வெள்ளை கரிசலாங்கண்ணி என்றும் அழைக்கபடுகிறது.

கரிசலாங்கண்ணியில் ஏகப்பட்ட மருத்துவப் பயன்கள் அடங்கியுள்ளன.

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைந்தால் இரத்தத்தில் உள்ள நீர்மத்தன்மை குறையும். இதனால் இரத்தம் தண்ணீர் போல அல்லாமல் சிறிது கெட்டியாக பசைத் தன்மை அடைகிறது. இதனால் இரத்தம் இரத்த நாளங்களில் எளிதாக செல்லாமல் ஆங்காங்கு படிந்து இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் பழையபடி நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து குடித்து வரலாம்.

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமிநாசினியாகும். இது அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட இடங்களில் இதன் இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டு போட்டாலும் புண்களை மிக விரைவில் ஆற்றிவிடும்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், கரிசலாங்கண்ணி சாறு தான் அந்த நோயில் குணமாவதற்கு முதன்மையான மருந்து. மேலும் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் வல்லமை பெற்றது கரிசலாங்கண்ணி.

உடலில் உள்ள தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, கீழாநெல்லி இலை சேர்த்து கஷாயம் போல செய்து குடித்து வரலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும்.

கரிசலாங்கண்ணி கீரை இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மேலும் மண்ணீரல், மற்றும் சிறுநீரகத்தைப் பலமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல் ஆகிய அனைத்திற்கும் கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.

ஆரம்ப நிலையில் உள்ள மனநோய்க்கு கரிசலாங்கண்ணி கீரை தான் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com