பெண்களே மாதவிடாய் 
ப்ரச்சனைகளா? இதை படியுங்க….!

பெண்களே மாதவிடாய்  ப்ரச்சனைகளா? இதை படியுங்க….!

தற்காலத்தில் அதிகம் இருக்கும் ப்ரச்சனைகளில் ஒன்று குழந்தையின்மைப்ரச்சனை. அதிலும் பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திர மாதவிடாய் பிரச்சனை என்பது ஏராளம்.

அதை தவிர கருப்பையில் தோன்றும் நீர்கட்டிகள் , கருமுட்டை வளர்ச்சி குறைப்பாடு என பல்வேறு ப்ரச்சனைகள் ஏற்படுகின்றன. குழந்தையின்மை ப்ரச்சனைகளுக்கு மாறி வரும் உணவு பழக்கங்கள் மற்றும்  சூழல்கள் , வாழ்வியல்  என பலவும் காரணமாக உள்ளது. இதனை சரி செய்ய இயற்கை நமக்கு அளித்த கொடை மலைவேம்பு என்னும்  இயற்கை மூலிகை.

malaivembu
malaivembu

மருத்துவ குணமிக்க மலைவேம்பு :

வேப்பமரத்தையொத்த அரிய மர வகைகளில் ஒன்று மலைவேம்பு இது ஒரு மூலிகைமரம். மலைவேம்பு மரத்தின் இலை, பூ, காய், பட்டை, கோந்து, வேர் ஆகிய அனைத்தும் மூலிகை வைத்தியத்துக்குப் பயன்படுகிறது. அது மட்டுமின்றி மலைவேம்பிற்கென பல்வேறு மருத்துவப் பயன்கள் உள்ளது.

பெண்களுக்குக் கருப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படும் போது அந்த பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்தாலோ மலைவேம்புச் சாற்றை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடித்தால், நீர்க்கட்டி குறையும்.

கருமுட்டை வளர்ச்சியும் அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இதுபெரும் பலனளிக்கும். மலைவேம்பு சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்க கூடாது.

மாதவிடாய் ஆரம்பம் ஆன முதல் மூன்று நாள் மலைவேம்பு இலை சாறு சுடுநீரில் கலந்து எடுத்து கொள்ள வேண்டும் அடுத்த 3 மணி நேரம் எந்த உணவும் கூடாது. இதன் கசப்பு தன்மை குறைய பனங்கற்கண்டோ நாட்டு சக்கரையோ சேர்த்து பயன்படுத்தலாம்.

இதனை தொடர்ந்து எடுத்து வர மூன்று மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும் . நீர் கட்டி பிரச்சனை தீர்வதோடு, குழந்தை பாக்கியமும் கிட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com