புளிச்ச கீரையின் மருத்துவ பயன்கள்

புளிச்ச கீரையின் மருத்துவ பயன்கள்

புளிச்சக்கீரையில் கால்சியும், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைவாக உள்ளது. இதில் வைட்டமின் பி, இ, சி, பொட்டாசியம் போன்றவை உள்ளது.

புளிச்சக்கீரை ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.

நீர் கோர்த்தல் பிரச்னை உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்னை இருப்பவர்களுக்கு, புளிச்சகீரையை மசியல் செய்து சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

புளிச்ச கீரையின் பூக்களை நசுக்கி சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறுகளும் நீங்கும்.

சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

புளிச்ச கீரையில் கொழுப்புச் சத்தை குறைக்கும் பண்புகள் இருப்பதால், இது இருதய வாஸ்குலர் நோய்களை தடுக்கிறது.

புளிச்ச கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சாதாரண செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றுவதற்கு முக்கிய காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவுகிறது.

புளிச்ச கீரையில் கலோரிகள் குறைந்த அளவில் உள்ளன. 100 கிராம் புளிச்ச கீரையில் 24 கலோரிகள் மட்டுமே உள்ளன.

மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது பசி உணர்வை குறைத்து நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.

புளிச்ச கீரையில் இருந்து தயாரிக்கப்படும் கோங்குரா தேநீர், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக பயன்படுத்தப் படுகிறது.

புளிச்ச்சக்கீரை பொடி, புளிச்சக்கீரை துவையல், புளிச்சக்கீரை மசியல் என ஏதாவது ஒரு வகையில் வாரம் இரண்டு முறை சேர்த்து வந்தால் வாதம் குறைந்து சமமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com