ஏலக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?
புரதம், மாவுப் பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புகளும், ஈரப்பதமும் கலந்த ஏலக்காய் நறுமணப் பொருளாக மணமூட்டுவதுடன் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
*பல் மற்றும் ஈறு சம்பந்தமான பாதிப்புகளைக் குறைக்கிறது.
*செரிமானத்தைத் தூண்டுகிறது.
*கண் பார்வை தெளிவைத் தந்து கண் ஒளியைப் பாதுகாக்க பயன்படுகிறது.
*குரல்வளை,தோல் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது.
*ஏலக்காய் பொடியை துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்.
*ஏலக்காய், சீரகம், சோம்பு இவற்றைப் பொடி செய்து மூன்றையும் ஐந்து கிராம் வீதம் எடுத்து தேனில் கலந்து குழைத்து சாப்பிட்டால் பசியின்மை போகும். ஜீரணத்தை அதிகப்படுத்தும்.
*அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு ஏலக்காயைத் தட்டி போட்டு புதினா இலை 4, 5 சேர்த்து கொதிக்க விட்டு அதை வடிகட்டி அருந்த விக்கல் நிற்கும்.
*ஏலக்காய், இலவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்க தொண்டை வலி குறையும்.
*ஏலக்காய்த் தூளை அடித் தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்வாங்கிக் வலி, குளிர் காய்ச்சலால் ஏற்படும் நாவறட்சி, தொண்டைக்கட்டைக் குணமாக்க உபயோகிக்கலாம்.
*ஏலக்காய் நான்கு, கிராம்பு நான்கு, வெற்றிலை காப்பு நான்கு எடுத்து பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பற்று போட தலைவலி, சளி விலகும்.
*ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட நரம்புகள் பலம் பெறும்.
*ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வறட்டு இருமல், தொண்டை வலி குணமாகும்.
*ஏலக்காய் தேநீர் புத்துணர்ச்சியைக் கொடுப்பதோடு, தலைவலி, சுவையின்மையைப் போக்கும்.