ஆண்மைக் குறைபாட்டை நீக்கும் வெற்றிலையின் பிற மருத்துவ குணங்கள்!

ஆண்மைக் குறைபாட்டை நீக்கும் வெற்றிலையின் பிற மருத்துவ குணங்கள்!

வெற்றிலைக்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல், மெல்லிலை போன்ற பல பெயர் உண்டு.

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் :

வெற்றிவையில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, கால்சியம், தயமின், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால், காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகிறது

குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குவதாகவும் உள்ளது.

வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணி, இளஞ்சூடான வெற்றிலையைக் கொண்டு பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். வெற்றிலை சாறு உடலில் உள்ள உள் வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

வெற்றிலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்.

கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும்.

அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும்.

இரண்டு ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com