நார்சத்து நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு!

நார்சத்து நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு!

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆண்டிஆஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. பொதுவாக கிழங்கில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது.இவை உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. மேலும் இரத்த சர்க்கரை அளவும் சீராக வைக்க உதவுகின்றது.

இந்த ஆரோக்கியமான சத்து மிகுந்த சக்கரை வள்ளி கிழங்கினை பயன்படுத்தி சப்பாத்தியை வாரம் ஒரு முறையாவது சமைத்து வீட்டில் உள்ளவர்கள் கொடுக்கலாம் . இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே சாப்பிடக் கூடிய நல்ல ஒரு ஹெல்தியான உணவு.

எல்லா வயதினருக்கும் ஏற்ற நல்ல டயட் உணவு என்றால் அது சப்பாத்தி தான். கோதுமை மாவில் இருக்கக் கூடிய பைபர் உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். சத்து நிறைந்த இந்த கோதுமை மாவுடன் சக்கரை வள்ளி கிழங்கையும் சேர்த்து செய்வது அதிலுள்ள சத்துக்களை அதிகரிக்க செய்யும். நார்சத்து நிறைந்த சக்கரை வள்ளி கிழங்கை வைத்து அருமையான சப்பாத்தியை தயாரிக்கலாம்.

சக்கர வள்ளி கிழங்கில் விட்டமின் ஏ பி சி போன்ற சத்துக்கள் நிறைந்து இருப்பதுடன் இரும்புச் சத்து, பொட்டாசியம், நார்ச் சத்து, போன்ற எண்ணற்றசத்துக்கள் கிழங்கில் உண்டு. பெரும்பாலும் கிழங்கு வகைகள் அதிகம் உண்பதை தவிர்த்து விடுகிறோம். இதற்கு காரணம் கிழங்கு வகைகளை உண்பதால் உடல் எடை கூடும் என்று தான். சக்கரவள்ளி கிழங்கை தொடர்ந்து சாப்பிடும் போது உடல் எடை கூடும் என்ற பயம் கொள்ளத் தேவையில்லை.

சக்கர வள்ளி கிழங்கு சப்பாத்தி செய்முறை:

இந்த சப்பாத்தி செய்வதற்கு முதலில் 1/4 கிலோ சக்கரை வள்ளி கிழங்கை சுத்தம்செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேக வைத்த சக்கரை வள்ளி கிழங்கு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போதேதோலை உரித்து ஒரு மேசர் வைத்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். மசித்தஉடன் இந்த கிழங்கிற்கு 1/2 கப் கோதுமை மாவு, 1/4 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன்ஓமம், சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கிழங்கில் இருக்கும் ஈரப்பதத்திலே அதைநன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மாவை மிகவும் தளர்வாக இல்லாமல்கொஞ்சம் கெட்டியாக பிசைந்து, அதன் மேலே லேசாக எண்ணெய் தடவி அரைமணி நேரம் இந்த மாவை அப்படியே ஊற வைத்து விடுங்கள்.

அரை மணி நேரம் கழித்து மாவை உங்களுக்கு தேவையான அளவில் சின்ன சின்னஉருண்டைகளாக பிடித்து, எப்போதும் போல சப்பாத்தி கட்டையில் தேய்த்த பிறகுஅடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன், ஒவ்வொரு சப்பாத்தியாக திரட்டிபோட்டு எண்ணெய் அல்லது நெய் உங்களுக்கு விருப்பமானவற்றை சேர்த்துசப்பாத்தியை சுட்டு எடுத்து விடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com