நுரையீரல் சளி அகற்ற எளிய மருத்துவ குறிப்புகள்!

நுரையீரல் சளி அகற்ற எளிய மருத்துவ குறிப்புகள்!

"நெஞ்சு சளி" அது ஆரம்பிக்கும் அறிகுறிகள் தெரிவதில்லை. ஒருவாரம் பத்து நாள் என அது உள்ளுக்குள் கோர்த்துக்கொண்டு வெளியில் எந்த ஒரு தொந்தரவையும் கொடுக்காமல் இருக்கும். நாட்பட நாட்பட மூச்சுக்குழல், நுரையீரல் முழுவதும் பரவி சளி கெட்டியாகிவிடும். மூச்சுவிட சிரமாக இருக்கும். எதனால் நெஞ்சு சளி ஏற்பட்டது, என்ன விதமான வைரசால் அது ஏற்பட்டது என்பதை வெளியேறும் சளியை வைத்து ஓரளவுக்கு ஊகிக்கலாம். மஞ்சள், பச்சை நீற வண்ணங்களில் சளி வெளியேறும். சளி பிடித்த பிறகு மூக்கடைப்பு, தலைவலி, உடற்சோர்வும் சேர்ந்தே வந்துவிடும்.

நுரையீரல் சளி அகற்ற:

நுரையீரலில் கோர்த்துக் கொண்டிருக்கும் சளியை போக்க நல்ல சுத்தமான கலப்படமில்லாத செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணைய் சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிய துண்டு கற்பூரத்தை போட்டு காய்ச்சி எடுக்க வேண்டும்.

அந்த கலவையை நெஞ்சில் தடவி வர மார்பு சளி கரைந்து வெளியேறி குணமாகும். மூச்சு விடுதல் எளிதாகும்.

நெஞ்சு சளி பொருத்தவரை சிறிது குணமானவுடன் விட்டு விடக்கூடாது. தொடர்ந்து வைத்தியம் செய்தால் மட்டும் முழுவதுமாக அது நுரையீரலை விட்டு வெளியேறி 100% குணம் தெரியும்.

வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து நன்றாக கலக்கி அதை குடித்து வந்தால் நுரையீரல் சளி கரையும்.

மஞ்சள் மற்றும் பசும்பால் கலவை மார்பு சளி நீக்கும் அருமருந்து ஆகும்.

குழந்தைகளுக்கு நெஞ்சு சளி பிடித்திருந்தால், அவர்களுக்கு ஒரு டம்ளர் பாலுடன், ஒரு சிட்டிகை நாட்டு மஞ்சள் பொடி கலந்து கொடுத்து வர நெஞ்சு சளி கரைந்து குணமாகும்.

ஒரு கப் நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் சிறிதளவு தேன், மற்றும் மிளகுத் தூள் கலந்து அருந்திவர மூக்கடைப்பு, சளி நீங்கி உடல்நலம் பெறலாம்.

சளியை நீக்குவதில் புதினா இலை மற்றும் மிளகு கலவை பெரும்பங்கு ஆற்றுகிறது. இவ்விரண்டையும் வெறும் வயிற்றில் சேர்த்து மென்று தின்று வர சளி குணமாகும்.

மார்பு சளி நீங்குவதற்கு இயற்கை கொடுத்திருக்கும் மருத்துவ உணவுகள் அதிகம். மூச்சிரைப்பு மற்றும் சளியை நீக்கும் இஞ்சி. இஞ்சி மிகச் சிறந்த இயற்கை வைத்தியப் பொருளாக பயன்படுகிறது. இஞ்சியைப் பார்த்தாலே அஞ்சி ஒடும் நெஞ்சு சளி என்ற சொலவடை இஞ்சியின் மகத்துவத்தை உணர்த்தும்.

இஞ்சி சாற்றில் தேன் கலந்து குலுக்கி, அந்தக் கலவையிலிருந்து சாறு எடுத்து குடித்து வர சளியால் வரும் வாந்தி, குமட்டல் போன்றவை குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com