சைனஸ்
சைனஸ்

சைனஸ் தொந்தரவா? கவலை வேண்டாம்!

சைனஸ் பிரச்சனை நோய் இரண்டு வகைப்படும். ஒன்று அக்யூட் ரியோ சைனஸைட்டீஸ் என்றழைக்கப்படுகிறது. இவை குறுகிய காலம் மட்டுமே இருக்கும். மற்றொன்று க்ரானிக் ரியோ சைனஸைட்டீஸ் என்றழைக்கப்படுகிறது. இது நீண்ட கால சைனஸ் ஆகும்.. தூசி, ஒவ்வாமை, ரசாயனங்கள் அல்லது எரிச்சலூட்டும் பொருட்கள் காரணமாக சைனஸ் தொற்று ஏற்படுகிறது. சைனஸ் பிரச்சனையின் பொதுவான அறிகுறிகளில் தலைவலி, தலைபாரம், சைனஸில் வலி, காதுகள் வலி , பற்கள் வலி, காய்ச்சல், வீக்கம், தொண்டை வலி, மூச்சுத்திணறல் மற்றும் இருமல் ஆகியவை அடங்கும்.

தற்போது சைனஸ் பிரச்சனைகளால் பலரும் அவதி அடைகின்றனர். அதனை நம் தினப்படி வாழ்க்கை நடைமுறைகள் மூலம் கட்டுப்படுத்தும் வழிகளை காணலாம் . சைனஸ் பிரச்சனை வந்தால் கடைபிடிக்க வேண்டியவை என்ன என்பதை பார்க்கலாம்.

சைனஸ்
சைனஸ்
 • பழங்களை எப்போதும் குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து நேரடியாக உண்ணக்கூடாது .சிறுது நேரம் வெளியே வைத்திருந்து அறையின் வெப்பநிலைக்கு வந்த பின்னரே சாப்பிட வேண்டும் .

 • இரவு உறங்கும் நேரத்தில் மின்விசிறி காற்று நேராக முகத்தில் படுமாறு படுத்தல் கூடாது .அப்படி படுத்தால் முகத்தில் மிக மெல்லிய துணியினை போட்டு தூங்கவும்.ஏசியினை தவிர்த்தல் நல்லது .

 • கூடுமானவரை சுடுநீர் அருந்தவேண்டும் . சுடுநீர் திரவங்கள் சளியை மெல்லியதாக்குகிறது. இதனால் நாசி பாதை வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

 • விடியற்காலையில் முடிந்தளவு வெந்நீரில் குளிப்பதை வழக்கமாக்கி கொள்ளலாம். குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டாம்

 • எப்போதும் குளித்த பின்னர் நன்கு தலையை உலர்த்த வேண்டும் .தேங்காய் எண்ணெய்யை தலைக்கு அதிகம் வைக்க வேண்டாம் குறிப்பாக குளிர் காலங்களில் எண்ணெய் பயன்படுத்துவதனை தவிர்க்கவும் .தேங்காய் எண்ணெய் அதிக குளிர்ச்சி தன்மைகொண்டது .

 • தயிர் உணவுகள் நேரடியாக உண்ணக்கூடாது .தாளித்த உணவாக உண்ணலாம் .

 • பழ வகைகளை அப்படியே நேரிடையாக சாப்பிட வேண்டும் .பழ ஜூஸில் ஐஸ் போட்டு குடிக்க வேண்டாம்.

 • பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்ந்த உணவுகளையும் ,ஜூஸ் போன்றவற்றையும் உண்ண வேண்டாம் .

 • வீடுகளில் ஊதுபத்தி, கொசுவத்தி போன்றவற்றை பயன்படுத்த கூடாது .புகை மற்றும் தூசு உள்ள இடங்களில் கைக்குட்டை கொண்டு மூடி கொள்ளவும் .

 • அதிகமாக மூக்கடைக்கும் போது ஆவி பிடித்தல் நல்ல பலன்தரும் நாசி வழியை சுத்தம் செய்ய நீராவி உதவுகிறது. ஒரு அகலமான பாத்திரத்தில், சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 8-9 புதினா இலைகளை சேர்க்கவும்.ஒரு துண்டை எடுத்து போர்த்தி ஆவி பிடிக்கவும். புதினா நீரிலிருந்து நீராவி எடுத்துக்கொள்வது சைனஸால் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் தரும். யூக்கலிப்டஸ் தைலம் கலந்தும் ஆவி பிடிக்கலாம்.

 • எப்போதும் சூடாக சமைத்த உணவுகளை உண்பதும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com