டிராகன் பழத்தில் இத்தனை நன்மைகளா?

டிராகன் பழத்தில் இத்தனை நன்மைகளா?

டிராகன் பழத்தை சாப்பிடுவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயங்களைக் குறைக்கலாம். பழத்தின் விதைகள் உடலுக்கு தேவையான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை அளிக்கின்றன. அவை இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான அமிலங்கள்.

டிராகன் பழம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகையைத் தடுக்கிறது.

டிராகன் பழம் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னை, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு கைக்கொடுக்கும்.

டிராகன் பழம் அதிகப்படியான நீர்ச்சத்தை கொண்டுள்ளதால், அது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் இப்பழத்தை உண்ணலாம்.

டிராகன் பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் மூட்டுகள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலியிலிருந்து விடுவிக்கும். நாள்பட்ட வலிகளுக்கு இது இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது

டிராகன் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், அது மூச்சுக்குழாய் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது.

டிராகன் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது, இது தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. டிராகன் பழத்தை சாப்பிடுவது முகப்பருவைக் குறைக்கவும், வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிக்கவும், சரும கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கவும் உதவி செய்கிறது.

டிராகன் பழம் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இதில் ஏராளமாக உள்ளது, இது எலும்புகளை வலுவாக்கும்.

டிராகன் பழத்தில் காணப்படும் லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் புற்றுநோயை உருவாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்க உதவுகிறது.

இரும்புச் சத்து, மெக்னீசியம் நிறைவாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நீங்கள் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க டிராகன் பழம் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com