சேனைக்கிழங்கில் இத்தனை நன்மைகளா!

சேனைக்கிழங்கில் இத்தனை நன்மைகளா!

சேனைக்கிழங்கில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஜிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், செலினியம் போன்ற அத்தியாவசிய கனிமங்கள் சேனைக்கிழங்கில் வளமாக நிறைந்துள்ளன.

இந்த கனிமங்கள் மன அழுத்தத்தை தணிக்கவும், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகின்றன.

சேனைக்கிழங்கு ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த சோகையை குணமாக்க வல்லது.

சேனைக்கிழங்கானது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. உணவில் உள்ள நச்சு கலவையை சமன் செய்கிறது. இதனால் புற்று நோய் ஏற்படும் தன்மையை குறைக்கிறது.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது.

சேனைக்கிழங்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை திறம்பட குறைக்க உதவுகின்றன. இது உடல் எடையைக் குறைக்க உதவும்.

சேனைக்கிழங்கில் வைட்டமின் சி இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

சேனைக்கிழங்கு உடலில் பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.

சேனைக்கிழங்கில் நீரிழிவு நோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ன. எனவே, இதனை உங்கள் வழக்கமான உணவுகளில் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.

சேனைக்கிழங்கானது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உகந்த அளவில் பராமரிக்கிறது.

சேனைக்கிழங்கின் இந்த குணம் மாதவிடாய் முன் ஏற்படும் வலிகளை தடுக்கவும், அதிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

சேனைக்கிழங்கு செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதன் மூலம் மலச்சிக்கலை தணிக்க உதவுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com