ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இத்தனை நன்மைகளா?

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இத்தனை நன்மைகளா?

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன.

கண்புரை ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கும் சக்தி ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு உண்டு

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள மாலிக் அமிலம் பற்களை வெண்மையாக்க உதவுகிறது.

ஒரு ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் பேக்கிங் சோடாவை கலந்து பிசைந்து பல் துலக்க பல் வெண்மை பெறும்.

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பொதுவான இருமல் மற்றும் சளியை குணப்படுத்த உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரிகளில் காணப்படும் அந்தோசயினின்களை மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் உதவுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com