ஆழ்ந்த உறக்கத்திற்கு சில டிப்ஸ்!

எப்போதுமே வடக்கிலும், தெற்கிலும் தலை வைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் காந்த புல வீச்சு இந்த திசைகளை நோக்கியே இருக்கும். அப்படித் தூங்கினால் கெட்ட கனவுகள் வரும், நமது மூளை பாதிக்கப்பட்டு ஞாபக மறதி ஏற்படும்.
இரவில் தக்காளி சாப்பிட்டால், அது செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். தூங்குவதற்குச் சில மணி நேரங்களுக்குமுன் இதைச் சாப்பிட்டால் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பசும் பால் இரவில் படுக்கும் முன்பு குடித்தால் சீக்கிரம் தூக்கம் வரும். ஏனெனில் அதில் மெலடோனின் மற்றும் ட்ரைப்டோபோஃன் என்ற ஹார்மோன்கள் அடங்கியுள்ளன.
வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.
ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்னை தீரும்.
முதியோர்கள் அதிக இரத்த அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கும் போது வாழைப்பழங்களை சாப்பிட்டால் எளிதில் தூக்கம் வரும்.
தண்ணீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, அதோடு கொஞ்சம் தேன் கலந்து இரவில் குடித்து வந்தால் ஆழ்ந்த உறக்கம் வரும்.
சுரைக்காயை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து அதே அளவிற்கு நல்லெண்ணெய் கலந்து இரவு உச்சந்தலையில் நன்றாக தேய்த்து வந்தால் நன்கு தூக்கம் வரும்.
பால், நட்ஸ் வகைகள், விதைகள், வாழைப்பழம், தேன் போன்ற உணவுகளை இரவில் சேருங்கள். இது உங்களுக்கு நல்ல உறக்கம் கொடுக்கும்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு குளியல் போட்டால் உடல் புத்துணர்ச்சி அடைந்து அது நிம்மதியான உறக்கத்திற்கு வழி வகுக்கும்.