சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் சௌசௌவிற்கு உண்டு.
சௌசௌ, ரத்தசோகைக்குக் காரணமான இரும்புச்சத்துக் குறைபாடு மற்றும் விட்டமின் பி2 குறைபாடு இரண்டையும் ஈடுகட்டி, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் மூலம் ஹீமோகுளோபின் அளவையும் கூட்டும் சக்தி கொண்டது.
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் நீர்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக் கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும்.
வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
செள செளவில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது சிறுநீரகங்களில் உள்ள கூடுதல் திரவங்களை அகற்றி அதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது
சௌசௌவானது குடல் பாதையை சுத்தம் செய்து பெருங்குடல் மற்றும் சிறுகுடல் சம்மந்தமான நோய்களை நீக்கும்.
சௌசௌவை அன்றாட உணவில் பயன்படுத்தி வருபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.