தனியா எனப்படும் மல்லி விதையின் மகத்துவம்!

தனியா எனப்படும் மல்லி விதையின் மகத்துவம்!
Published on

தனியா எனப்படும் கொத்தமல்லி விதைகள் நம் உடலுக்கு பல நன்மைகள் தர வல்லது. இதில் வைட்டமின் A, B-1, இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரோடின், எனர்ஜி, நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன. சர்க்கரை நோய், அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இவ்விதையை இரண்டு டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை நீரை வடிகட்டி தினசரி குடித்து வர, சர்க்கரை/கொலஸ்ட்ரால் அளவு சமன்படும். தனியா, ரத்தசோகை, மலச் சிக்கலை நீக்கும். வயிற்று வலி, அசிடிட்டி, உப்புசம், வாயு தொல்லை போன்ற வயிற்றுப் பிரச்சனைகளுக்கு அருமருந்து.

இரண்டு ஸ்பூன் தனியா பவுடரை கொதிக்கும் நீரில் போட்டு, வடிகட்டி, சிறிது தேன் கலந்து குடிக்க உடனடி நிவாரணம் கிடைக்கும். தனியாவுடன் சுக்கு சேர்த்து பொடி பண்ணி வைத்துக்கொண்டு, அவ்வப்போது கொதிக்கும் நீரில் அப்பவுடரைப் போட்டு, வடிகட்டி, நாட்டுச் சக்கரை சேர்த்து குடித்து வந்தால் தலைவலி போன்ற பிரச்சனை வராது. இத்தனை நன்மைகளை தன்னுள் கொண்டிருக்கும் தனியாவை அடிக்கடி உணவில் சேர்ப்போம்! ஆரோக்கியம் பெறுவோம்!!

தனியா பொடி செய்யும் முறை :

50 கிராம் தனியா, ஒரு டீஸ்பூன் கடுகு, 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறு துண்டு பெருங்காயம், நெல்லிக்காய் அளவு சுத்தம் செய்த புளி - இவை அனைத்தையும், தனித் தனியா சிறிதளவு எண்ணெய் விட்டு கடாயில் வறுத்தெடுக்கவும்.

ஆறிய பின் அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, கொஞ்சம் கொர கொரப்பா வரும்படி அரைக்கவும். இப்பொடியை சூடான சாதத்தில் சேர்த்து நெய்யுடன் பிசைந்து சாப்பிட பலவித சத்துக்கள் உடம்புக்குக் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com