தினை அரிசியின் நன்மைகள்!

தினை அரிசியின் நன்மைகள்!

தினை அரிசியில் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 

தினை அரிசியை கொண்டு செய்யபட்ட உணவுகளை சாப்பிட்டு வருவதால் உடலின் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப் படும்.

தினை அரிசியில் கால்சியம் சத்து அதிகமாகவே உண்டு என்பதால் இதை அடிக்கடி சேர்த்து வந்தால் எலும்புகள் வலிமையடையும். பற்கள் உறுதியாகும்.

திணை அரிசியை மாவாக இடித்து அந்த மாவில் பசும் நெய் கலந்து களிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நரம்புகள் வலுவடையும்.

தினை கப நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. காய்ச்சல் சளி இருக்கும் போது தினை அரிசி கஞ்சி குடித்து வந்தால் அதன் வேகத்தை கட்டுப்படுத்தும்.

மாதவிடாய் நின்ற பெண்கள் தினை சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் அபாயம் குறையும்.

மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் இதில் நிறைய உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மன அழுத்த பிரச்சனைகளை தீர்க்கும்.

தினை அரிசியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களின் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும்.

தினையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிக்காமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.

தினை நல்லது என்பதற்காக தினமும் எடுத்துகொள்ள கூடாது. அடிக்கடி எடுத்துகொண்டால் அவை பித்தத்தை அதிகரிக்க செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com