முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்? முத்தான டிப்ஸ் இதோ!

முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்? முத்தான டிப்ஸ் இதோ!

ஆரோக்கியத் தகவல்

முகப்பரு தொந்தரவு என்பது இக்காலத்தில் நிறைய பேருக்கு உள்ளது. முகத்தின் அழகைக் கெடுப்பதுடன், வலியும் ஏற்படும். அப்படிப்பட்ட முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்? அதற்கான முத்தான டிப்ஸ் பற்றி இங்கே காண்போம்.

* திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும்.

* ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை நசுக்கி, சில துளிகள் தண்ணீரை சேர்த்து பேஸ்டாக மாற்றவும். பருவில் பேஸ்டைப் பயன்படுத்துங்கள்.

* துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.

* திரிபலா பொடி கஷாயத்தால் முகம் கழுவி வந்தாலும் பருக்கள் நீங்கும்.

* பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.

* பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும்.

* சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.

* எலுமிச்சைச் சாற்றுடன் நீர் சேர்த்து, பரு உள்ள இடங்களில் தடவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பருக்கள் மறையும்.

* ஒரு சிறிய க்ரீன் டீ பையை தண்ணீரில் காய்ச்சவும், பின்னர் அதனை குளிர வைக்க வேண்டும். அது குளிர்ந்தவுடன் அதனை பரு மீது வைக்கவும். இது ஒரு பயனுள்ள தீர்வு.

* வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பருக்கள் மறையும்.

* சில ஐஸ் கட்டிகளை எடுத்து அவற்றை நன்றாக துணியால் மூடி வைக்கவும். அதனை பருக்கள் மீது வைக்கவும். சருமத்தில் நேரடியாக ஐஸ் கட்டியை பயன்படுத்த வேண்டாம். விரைவில் பருக்கள் மறையும்.

* வாழைப்பழத்தின் தோலை அரைத்து அதனுடன் குறைந்தளவு தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகப்பரு மற்றும் தழும்புகளிலிருந்து விடுபடலாம்.

* கற்றாழை ஜெல்லை முகப்பருவுக்கு மேல் பயன்படுத்துவதன் மூலம் ஒரே இரவில் பருவை நீக்க முடியும்.

* வேப்பிலை கலந்த சுடு நீரில் ஆவி பிடித்தால் முக துவாரங்கள் திறந்து, அதிலுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இதன் மூலமாக மாசு நிறைந்த இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறி பருக்கள் நீங்கும்.

* பருக்கள் உள்ள இடங்களில் தேனை தடவி சிறிது நேரம் ஊற வைத்த பிறகு பால் கொண்டு கழுவி, குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்களை போக்கலாம்.

* அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் பரு நீங்கும்.

* கடலை மாவு, சந்தனப் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் பருக்கள் நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com