முகம் பளபளப்பாக மாறவேண்டுமா? கைப்பிடி ரோஜா இதழ்கள் போதுமே !

முகம் பளபளப்பாக மாறவேண்டுமா? கைப்பிடி ரோஜா இதழ்கள் போதுமே !

முதலில் முகத்தை காய்ச்சாத பசும் பாலை பஞ்சில் நனைத்து முகத்தினை அழுந்த துடைத்து கொள்ளவும் . பின்னர் கீழேயுள்ள முறையில் செய்த ரோஜா டோனரை முகத்தில் ஸ்பீரே செய்தால் முகம் அன்று மலர்ந்த ரோஜாவை போல மாறிவிடும்.

முதலில் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை எடுத்து சுத்தம்செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அடுப்பில் பாத்திரம் வைத்து நல்லசுத்தமான குடிநீரை அரை லிட்டர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

தண்ணீர்கொதிக்கும் போது சுத்தம் செய்து வைத்த ரோஜா இதழ்களை அதில் சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அது கால் லிட்டர் ஆகும் வரை கொதிக்க விட்டுஅடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த தண்ணீரை 8 மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள்.

ரோஜாஇதழ்களில் இருக்கும் எசென்ஸ் முழுவதுமாக தண்ணீரில் இறங்கி தண்ணீர் நல்ல பிங்க் நிறத்திற்கு மாறியிருக்கும்.

இந்த தண்ணீரை ஒரு பவுலில் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள் . இத்துடன் ஒரு ஸ்பூன் சுத்தமான ஆளுவேரா ஜெல் வாங்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் இருக்கும் கற்றாழையை எடுத்து சுத்தம் செய்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து அதையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

வீட்டில் இருக்கும் இயற்கையான ஆலிவேரா ஜெல்லை சேர்ப்பதாக இருந்தால் ஆலுவேரா ஜெல் சேர்த்த பிறகு வடிகட்டிக் கொள்ளுங்கள்.

அப்போதுதான் இதை ஸ்பிரே செய்யும் போது பாட்டிலில் அடைக்காது.

இப்போது ரோஜா இதழும், ஆலுவேரா ஜெல்லும் கலந்த இந்த தண்ணியை ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைத்து விடுங்கள்.

இதை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை உங்கள் முகத்தில் அடிக்கடி ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். ஸ்பேரே செய்த பிறகு முகத்தை துடைக்காமல் அப்படியே விட்டு விடுங்கள். இரவில் உறங்க செல்லும் போது மட்டும் முகத்தை நன்றாக அலம்பி விட்டு இதை ஸ்பிரே செய்து அப்படியே விட்டு விடுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் முகம் பளபளப்பாக மாறி வெள்ளையாக மாறுவதுடன், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருத்திட்டு, கருவளையம் அனைத்தும் மறைந்து விடும். இதைத் முறையை தொடர்ந்து பயன்படுத்துவதனால் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி முகப்பரு வருவதையும் இது தடுத்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com