அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதோ மலாய்க்கா அரோரா தரும் யோகாசன டிப்ஸ்!

அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதோ மலாய்க்கா அரோரா தரும் யோகாசன டிப்ஸ்!

மலாய்க்கா அரோராவைத் தெரியாதவர்கள் உண்டா?! சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கானின் முன்னாள் மனைவி, அர்ஜூன் கபூரின் காதலி என்ற அடையாளங்களைக் காட்டிலும் அவருக்கு பெருமை தரத்தக்க மற்றொரு அடையாளம் என்ன தெரியுமா? அப்போதும், இப்போதும், எப்போதுமே சிக்கென்று இருக்கிறார். சிங்கிள் மதராகத் தன் மகனுடன் மிக அருமையாகக் குவாலிட்டி டைம் செலவழிக்கிறார் என்பது தான் அது. ஆம், மலாய்க்காவின் சிக்கென்ற தோற்றத்துக்கு அவரது உடற்பயிற்சி மற்றும் யோகா பழக்கமே பிரதான காரணம். அதுமட்டுமல்ல அவர் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக். அதாவது தினமும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீராத தாகம் கொண்டவர் அவர்.

மலாய்க்கா அரோராவைத் தெரியாதவர்கள் உயிரே படத்தின் தைய்ய தைய்யா பாடலைப் பார்க்கவும். பிறகு நமக்கும் கூட பெல்லி ஃபேட்டைக் குறைத்தே ஆகவேண்டும் என்று ஆர்வம் வந்து விடும். இங்கு மலாய்க்கா நமக்கு பரிந்துரைப்பது மூன்று எளிமையான யோகாசனங்களையே. இவை செய்வதற்கு மட்டுமல்ல தினமும் பின்பற்றுவதற்கும் எளிதானதே.

நவ்காசனம்...

இதைச் செய்வதால் அடிவயிற்றுச் சதை குறையும். அதாவது பெல்லி ஃபேட்டுக்குக் காரணமான சதை இறுகி தொப்பை குறையும். அது மட்டுமல்ல இந்த ஆசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்தால் இது நரம்பு தளர்ச்சியைப் போக்குவதோடு வயிற்றில் தோன்றும் புழுக்களையும், பூச்சிகளையும் எளிதில் மலத்தின் மூலம் வெளியேற்றும் என்கிறார்கள் யோகாசனப் பயிற்சியாளர்கள். அத்துடன் இந்த ஆசனப் பயிற்சி நுரையீரல் கல்லீரல், கிட்னி, மலக்குடல் ஆகியவற்றின் வேலைகளை துரிதப்படுத்தவும் செய்யுமாம்.

செய்யும் முறை...

கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு உடலை அசைக்காது கால்களை மட்டும் முன்னோக்கி படகு போல உயர்த்தி முகத்துக்கு நேராகப் பிடித்துக் கொண்டால் அது தான் நவ்காசனம்.

கும்பகாசனம்...

இது செய்வதற்கு மிக எளியதொரு யோகாசனப் பயிற்சி.இதைச் செய்வதால் வயிற்று கொழுப்புக்கள் கரைந்து தொப்பை குறையும். மேலும் இந்த ஆசனத்தினால் கைகள், தோள்பட்டை, முதுகு, பிட்டம் மற்றும் தொடைகள் போன்ற இடங்களும் இறுகி வலிமையடையும்.

செய்யும் முறை..

முதலில் தரையில் குப்புறப்படுத்து, புஷ்-அப் நிலையில் 15-30 நிமிடம் மூச்சை உள்ளிழுத்தவாறு இருக்க வேண்டும். பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இப்படி 5 முறை செய்ய வேண்டும். ஒருவேளை உங்களுக்கு முதுகு அல்லது தோள்பட்டையில் காயங்கள் அல்லது உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டாம்.

புஜங்காசனம்...

புஜங்காசனம் இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம் தண்டுவடத்தையும் வலிமையாக்கும்.

செய்யும் முறை...

முதலில் குப்புறப்படுத்துக் கொண்டு, இரு உள்ளங்கைகளையும் மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றிக் கொள்ளவும், மூச்சை உள்ளிழுத்தவாறு முகத்தையும், உடலையும் உயர்த்த வேண்டும்.இதே நிலையில் 15-30 நொடிகள் இருக்க வேண்டும். பின் மூச்சை மெதுவாக வெளிவிட்டவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதை ஒரு நாளைக்கு 5 முறை செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com