யார் யார் எதை எதைத் தவிர்க்க வேண்டும்!

யார் யார் எதை எதைத் தவிர்க்க வேண்டும்!

பூசணிக்காயை, ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.

முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் முருங்கைக்காய் சாப்பிடக்கூடாது.

கத்தரிக்காயை  சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும்.

ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி, காய்ச்சல் மற்றும் உடம்பில் எதாவது வலி உள்ளவர்கள் புடலங்காய் சாப்பிடக்கூடாது.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிடக்கூடாது.

அஜீரணக் கோளாறுகள் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள், சர்க்கரை நோயாளிகள் பலாப்பழத்தை அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், சிறுநீரகம் செயலிழந்தவர்கள், டயாலிசிஸ் செய்வதற்கு முந்தைய ஸ்டேஜில் உள்ளவர்கள், டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் தக்காளியை எடுத்துக் கொள்ளக் கூடாது.

அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பவர்கள், பாகற்காயை சாப்பிடக்கூடாது. அது  மருந்தின் தன்மையை முறித்து விடும்.

உடல்பருமன், இதயக்கோளாறு, ரத்த ஒழுக்கு இருப்பவர்கள், ரத்தம் உறைதல் (Blood clotting) பிரச்னை உள்ளவர்கள் இஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.

கர்ப்பிணிகள் பூண்டை அதிகம் சாப்பிட்டால், அது விரைவில் பிரசவ வலியை ஏற்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com