1 டன் ஏசி, 1.5 டன் ஏசி ... 'டன்' எடையை குறிக்குதா? வாங்க தெரிஞ்சுக்கலாம்

பொதுவாக ஏசியை வாங்கும்போது 1 டன் ஏசி, 1.5 டன் ஏசி என்று சொல்வதை பார்த்திருப்போம். இதில் டன் (TON) எதை குறிக்கிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
air conditioner
air conditioner
Published on

கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. ஏசி (air conditioner) இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு மிகவும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. பொதுவாக ஏசியை வாங்கும்போது 1 டன் ஏசி, 1.5 டன் ஏசி, 2 டன் ஏசி என்று பார்த்து வாங்குகிறார்கள். இதில் 'டன்' (TON) எதை குறிக்கிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

'டன்' என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது எடை. ஆனால் உண்மையில் ஏசி சாதனத்தின் எடையை இது குறிப்பிடவில்லை என்பதுதான் உண்மை. பொதுவாகவே ஏசி சாதனம் 1 டன் ஏசி (1 TON AC), 1.5 டன் ஏசி (1.5 TON AC) மற்றும் 2 டன் ஏசி (2 TON AC) என்று பிரிவுபடுத்தப்படுகின்றன. இந்த டன் என்ற வார்த்தை அந்த ஏசி சாதனத்தின் கூலிங் கெப்பாசிட்டியை குறிப்பிடுகிறது. அதாவது ஒரு மணிநேரத்தில் ஒரு அறையிலிருந்து ஏசி எவ்வளவு வெப்பத்தை நீக்க முடியும் என்பதைக் குறிக்கிறது.

- 1 டன் ஏசி 12,000 BTU அளவை கொண்டுள்ளது. இது 1 மணிநேரத்திற்குள் 12,000 BTU அளவில் அறையை குளிர்விக்கக்கூடியது.

- 1.5 டன் ஏசி 18,000 BTU அளவை கொண்டுள்ளது.

- 2 டன் ஏசி 24,000 BTU அளவை கொண்டுள்ளது.

- BTU என்பது பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டை (British Thermal Units) குறிக்கிறது.

அதிக டன் அளவு கொண்ட ஏசி வேகமாக அறையை குளிரூட்டுகிறது. பெரிய அறைகளுக்கு அதாவது 180 சதுர அடிக்கு மேல் உள்ள அறைகளுக்கு 2 டன் அளவு தேவைப்படும். 120 முதல் 180 சதுர அடிக்கு 1.5 டன் ஏசி சிறந்தது. அதேபோல் 120 சதுர அடி வரை உள்ள சிறிய அறைக்கு ஒரு டன் ஏசி போதுமானது.

சிறிய அறைக்கு பெரிய அளவு கொண்ட ஏசியை தேர்ந்தெடுப்பதும், பெரிய அறைக்கு சிறிய அளவு கொண்ட ஏசியை தேர்ந்தெடுப்பதும் மின்கட்டணத்தை அதிகரிப்பதோடு, மோசமான குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் சரியான டன் அளவை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.

மின்சார கட்டணத்தை கட்டுப்பாட்டில் வைக்க விரும்பினால், கட்டாயமாக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஏசி (5 star rating AC) மாடல்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடல்கள் 3 ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஏசி மாடல்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.

இறுதியாக ஏசிகளில் 'டன்' என்பது எடையை குறிப்பதல்ல. அதன் கூலிங் கெபாசிட்டியையே குறிக்கிறது. ஆகவே ஒரு சரியான டன் ஏசியை தேர்ந்தெடுப்பதற்கு முன் அறையின் அளவு, இன்சுலேஷன் மற்றும் உள்ளூர் வானிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். சரியான டன் ஏசி பணத்தை மிச்சப்படுத்துவதோடு, கோடைகாலத்தை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் வைத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்க அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்கணும்னு தெரியலையா? அப்போ இதை முழுசா படிங்க!
air conditioner

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com