உங்க அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்கணும்னு தெரியலையா? அப்போ இதை முழுசா படிங்க!

How to choose the right ton AC for your room?
How to choose the right ton AC for your room?

உங்கள் அறைக்கு ஏற்ற ஏர் கண்டிஷனரைத் தேர்ந்தெடுப்பது, கோடைகாலத்தில் உங்கள் அறைக்கு உகந்த குளிர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. அதுவும் இன்றைய காலத்தில் சந்தையில் பல்வேறு மாடல்கள், அளவுகள் மற்றும் அம்சங்களுடன் ஏசி-க்கள் வருவதால், அதில் சரியானதைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். இந்த பதிவில் உங்கள் அறைக்கு ஏற்ற சரியான டன் ஏசியை எப்படி தேர்ந்தெடுப்பது? என முழுமையாகப் பார்க்கலாம். 

1. அறையின் அளவு: நீங்கள் எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது உங்கள் அறையின் அளவு தான். அறையின் நீளம் மற்றும் அகலத்தை கணக்கிட்டு சதுர அடியை கண்டுபிடிங்கள். உதாரணத்திற்கு 12 அடி நீளமும், 10 அடி அகலமும் இருந்தால் உங்கள் அறையின் சதுர அடி 120. எனவே 120 சதுர அடிக்கு எந்த ஏசி போதுமானது என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

  • Up to 100 square feet - 0.8 ton

  • Up to 150 square feet - 1 ton

  • Up to 250 square feet - 1.5 ton

  • Up to 400 square feet - 2 ton

2. குளிரூட்டும் திறன்: ஏசியின் குளிரூட்டும் திறன் BTU என்ற அலகுகளில் அளவிடப்படுகிறது. இது ஏசி எவ்வளவு வெப்பத்தை அறையில் இருந்து வெளியேற்றும் என்பதைக் குறிப்பதாகும். உங்கள் அறையின் சதுர அடியை 20 ஆல் பெருக்கும்போது, எவ்வளவு BTU வருகிறது எனப் பாருங்கள். இந்த அளவுக்கு திறன் கொண்ட ஏசியைத் தேர்ந்தெடுங்கள். 

3. ஆற்றல் திறன்: மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு ஆற்றல் திறன் வாய்ந்த ஏசியை தேர்வு செய்வது அவசியம். எளிமையாக புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஸ்டார் ரேட்டிங் அடிப்படையில் இதைக் குறிப்பிடுவார்கள். அதாவது 3 ஸ்டார் ஏசியை விட 5 ஸ்டார் ஏசியில் மின்சாரக் கட்டணம் குறைவாக வரும். மேலும் இது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக கருதப்படுகிறது.

4. கூடுதல் அம்சங்கள்: இப்போது வரும் ஏசி-களில் அதிகப்படியான கூடுதல் அம்சங்கள் கொடுக்கப்படுகின்றன. சரி செய்யக்கூடிய ஃபேன் வேகம், டைமர்கள், ஸ்லீப் மோட், திறன் வாய்ந்த ஃபில்டர்கள் மற்றும் குறைந்த இரைச்சல் தொழில்நுட்பம் போன்ற அனைத்தையும் கவனியுங்கள். இதில் எது உங்களுக்கு முக்கியமானது என்பதைப் பார்த்து ஏசியைத் தேர்ந்தெடுக்கவும்.

5. பட்ஜெட் மற்றும் தரம்: நீங்கள் எவ்வளவு விலையில் ஏசி வாங்கப் போகிறீர்கள் என்ற பட்ஜெட்டை தீர்மானித்து அந்த வரம்பிற்குள் இருக்கும் ஏசி வகைகளைத் தேடுங்கள். அதிக விலை கொண்ட ஏசி தரமாகவும், மேம்பட்ட அம்சங்களுடன் இருக்கும். உங்களது விலைக்கு ஏற்ற வகையில் உள்ள தரமான ஏசியைத் தேர்ந்தெடுக்கவும். ஏனெனில் இதில் ஒருமுறைதான் முதலீடு செய்யப் போகிறீர்கள், தரமற்ற ஏசியை வாங்கி, அவ்வப்போது பழுதானால் அதற்கான செலவுகளே உங்களுக்கு அதிகரிக்கும் என்பதால், தொடக்கத்திலேயே தரமான ஏசி வாங்குவது நல்லது. 

இதையும் படியுங்கள்:
AC Cleaning Tips: உங்க ஏசியை நீங்களே சுத்தம் செய்யலாமே! 
How to choose the right ton AC for your room?

இறுதியாக உங்களுக்கு ஏசியைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை என்றால், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. உங்கள் அருகில் இருக்கும் தொழில்முறை வல்லுனர்களை நாடி, உங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொண்ட பிறகு ஏசி வாங்கும் முடிவை எடுக்கவும். இது உங்களுக்கு பல வகைகளில் உதவும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com