மனப் பதற்றத்தை உடனே குறைக்க உதவும் 10 எளிய வழிமுறைகள்!

Mental tension
மனப் பதற்றம்
Published on

ருவர் மனப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதை அவரது உடல்மொழியே காட்டிக் கொடுத்துவிடும். அவருக்கு வியர்த்துக் கொட்டும். கை, கால்களில் நடுக்கம், தலைவலி, வயிற்றுவலி, தசைவலி விழுங்குவதில் சிரமம், சோர்வு, நடுக்கம், மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, எளிதில் திடுக்கிடுவது, தூங்க முடியாத தன்மை போன்றவை பதற்றத்தின் அறிகுறிகளாகும்.

மனப் பதற்றத்தை உடனே குறைக்க உதவும் 10 எளிய வழிமுறைகள்:

1. ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுதல்: டென்ஷனாக இருப்பவர்களுக்கு மூச்சு சீராக இல்லாமல் குறுமூச்சு விடுவார்கள். அப்போது நல்ல ஆழமான மூச்சை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும். நான்கு எண்ணிக்கொண்டு உள்ளிழுத்து நான்கு எண்ணி அதை அப்படியே வைத்திருந்து, பின் 4 எண்ணிய பிறகு அதை வெளியே விட வேண்டும். இதை நான்கு முறை செய்யலாம்.

2. ஐம்புலன்கள் பயிற்சி: பதற்றத்தில் இருக்கும்போது எதுவும் நிதானித்து கவனிக்க முடியாது. இதைத் தவிர்க்க, உங்களைச் சுற்றியுள்ள பொருட்களில் ஐந்து பொருட்களை மட்டும் அடையாளம் காணுங்கள். அதாவது, இங்கு ஒரு மேசை, பேனா, பூந்தொட்டி, அங்கே ஒரு புத்தகம்,  நாற்காலி உள்ளது என கவனித்துப் பார்க்க வேண்டும். அதில் நான்கு பொருட்களை தொட்டுப் பாருங்கள். 3 விதமான சப்தங்களைக் கேளுங்கள். அதாவது ஒருவர் பேசும் ஒலி, கத்துவது மற்றும் சிரிப்பு சத்தம் போன்றவை. இரண்டு விதமான வாசனைகளை நுகரலாம். ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் அல்லது பழம் சாப்பிடலாம்.

3. கை விரல்களை மூடித் திறக்கலாம்: இதைப் பத்து முறை செய்யலாம். உடலைத் தளர்த்திக் கொள்ளலாம்.

4. காட்சிப்படுத்துதல்: கண்களை மூடிக்கொண்டு ஒரு அமைதியான இடத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பிடித்த சூழ்நிலையில் நீங்கள் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு அதே நிலையில் ஒரு ஐந்து நிமிடம் நீடிக்கவும்.

5. நேர்மறை உறுதிமொழி: 'நான் நன்றாக இருக்கிறேன். இந்த நிலை சீக்கிரம் கடந்து விடும். நான் கட்டுப்பாடாக இருக்கிறேன்’ என்று மந்திரம் போல பத்து தடவை சொல்லிக் கொள்ளவும்.

6. ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும்: இது  பதற்றத்தை நன்றாகவே மட்டுப்படுத்தும்

7. உடல் செயல்பாடுகள்: நடத்தல், உடலை ஸ்ட்ரெட்ச் செய்வது அல்லது கைகள் மற்றும் கால்களை ஆட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பதற்றம் குறையக்கூடும்.

இதையும் படியுங்கள்:
ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்ட தமிழர்களின் வீரத்தைப் பறைச்சாற்றக்கூடிய ஆயுதம் எது தெரியுமா?
Mental tension

8. ஜில் சிகிச்சை: முகத்தை நன்றாகக் குளிர்ந்த நீரால் கழுவவும். ஃபிரிட்ஜில் இருந்து ஒரு ஐஸ் கியூப்பை எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து அழுத்தவும். நமது உடல் உணர்திறனுக்கு  வேலை தரும்போது மனப்பதற்றம் குறையும்.

9. பின்னோக்கி எண்ணுதல்: நூறிலிருந்து பின்னோக்கி ஒன்று வரை எண்ணலாம். ஒரு படத்தை எடுத்து கலர் செய்யலாம். அல்லது குறுக்கெழுத்து புதிர்களில் ஈடுபடலாம்.

10. ஆலோசனை: மிகவும் நெருங்கிய நண்பர்களிடமோ அல்லது குடும்ப உறுப்பினர்களிமோ உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும். ஆலோசனை கேட்கலாம்.

இந்த 10 எளிய செயல்கள் பதற்றத்தை நன்றாகக் குறைத்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com