
பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுவதோடு, அதிகமான நேரம் ஆபீஸில் இருக்கிறோம் . நல்லவராக இருப்பதோடு மற்றவர்களுக்கு நீங்கள் எந்த மாதிரியான உணர்வுகளை அளிக்கிறீர்கள் என்பது மிக மிக அவசியம். அந்த வகையில் ஆபீஸில் உங்களை அனைவருக்கும் பிடிக்க நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. அக்கறை செலுத்துங்கள் :
உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் சந்திக்கும் சவால்கள் அவர்களின் வெற்றிகள் குறித்து ஆர்வம் காட்டுவதோடு, அவர்களிடம் பேசும் போது அவர்களின் கருத்துக்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு பேசும் வாய்ப்பை கொடுத்து ஆபீஸில் ஏற்படும் பிரச்சனை களுக்கு டிப்ஸ் கொடுத்தால் அவர்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருக்கும் என்ற எண்ணத்தை அது உருவாக்கும் .
2. பாசிட்டிவ் எனர்ஜி :
ஸ்ட்ரெஸ்ஸான இடமாக இருக்கும் அலுவலகத்தில், நீங்கள் பாசிட்டிவ் மனப்பான்மை கொண்டிருந்தால், அது மற்றவர்களுக்கு பரவுவதோடு, சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்கலாம்.யாரை பற்றியும் சட்டென்று கருத்து சொல்லிவிடாமல் மற்றவர்களின் மனநிலையை மாற்றி உற்சாகப்படுத்துங்கள்.
3. உதவக்கூடியவராக இருங்கள் :
தனிப்பட்ட முறையில் வெற்றியடைவதைவிட குழு வெற்றியே முக்கியம் என்பதால் யாருக்காவது உதவி தேவைப்பட்டால், முன்வந்து செய்வதோடு, மற்றவர்களின் சாதனைகளையும் பாராட்டுங்கள். சிறிய விஷயங்களிலும் "Let me help you" என்ற மனப்பான்மையுடன் இருங்கள்.
4. நாடகம் வேண்டாம் :
அலுவலக அரசியலில் (Office Politics) ஈடுபடாமல், எதிர்மறையான விமர்சனங்களை அதிகம் பேசாமல் இருப்பது மிகவும் முக்கியம். யாரை பற்றியும் காஸிப்பிங் வேண்டாம். ஒருவரைப் பற்றி வேறு ஒருவரிடம் பேசுவதற்கு பதிலாக, நேரடியாக அவரிடமே பேசுவது "Mature and Professional" நபராக உங்களை காட்டும்.
5. கவனமாக கேட்கும் பழக்கம்:
நாம் பேசும்போது எல்லோரும் கவனிக்க வேண்டும் என்று விரும்புவதைப்போல , மற்றவர்கள் பேசும்போது மொபைலை பார்க்காமல் அவர்கள் பேசுவதை கவனியுங்கள். இடையறாமல் அவர்களின் பேச்சை கஷ்டப்படுத்தாமல் கேளுங்கள். நாம் ஒரு நல்ல Listener என்றால், மக்கள் உங்கள் உடன் இருக்க விரும்புவார்கள்.
6. நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள் :
லைட் மூட் (Light Mood) கொடுக்க ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு அலுவலகத்திற்கு அவசியம் என்பதால் தேவையான இடங்களில் அதிகமாகாமல் நகைச்சுவை சேருங்கள். நம்மீதான கிண்டல், கேலி பேச்சுக்கள் என்றாலும் கூட சிரிக்கத் தயங்க வேண்டாம். மற்றவர்களை வருத்தும் "Insensitive Jokes" தவிர்ப்பதோடு, "Fun to be around" என்ற பெயர் கிடைத்தால் அவர்களை எல்லோரும் விரும்புவார்கள்!
7. நேர்மையான பாராட்டுகளை வழங்குங்கள் :
மற்றவர்களின் திறமைகளை உண்மையாக பாராட்டுவது, அவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நல்ல பெயரை உருவாக்கும்.
8. உடை அணியும் முறை :
அலுவலக கல்சரைப் பொறுத்து Dressing Style மாற்றுவதோடு சரியான உடைகளை அணியுங்கள். நீங்கள் சிறப்பாகக் காணப்பட்டால், மக்கள் உங்களைப் பற்றிய முதல் கருத்து சிறப்பாக இருக்கும்.
9. எந்த நேரத்திலும் மரியாதை முக்கியம் :
பாஸ் முதல் ஜூனியர் கிளீனர் வரை எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியான மரியாதை காட்டுங்கள் . அனாவசியமாக ஆணவம் இல்லாத மரியாதை உள்ள நபர்கள் எப்போதும் விரும்பப்படுவார்கள்.
10. மற்றவர்களின் நேரத்தை மதியுங்கள்:
சொன்ன வார்த்தைகளை காப்பாற்றி மீட்டிங்கிற்கு நேரத்தில் வர . நேரத்தை மதிப்பவர்கள் மற்றும் நம்பகத்தன்மை உள்ளவர்களை அனைவரும் விரும்புவார்கள்.
மேற்கூறிய பத்து செயல்களிலும் கவனம் செலுத்தினால் அலுவலகத்தில் எல்லோரும் மதிக்கப்படும் நபராக மாறுவோம்.