
1. கேள்விகள்: பெண்கள் துருவித் துருவி கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். ஆனால், ஆண்கள் பதில் சொல்லாமல் மழுப்புவதில் மன்னர்கள். சிபிஐ விசாரணை போல கேள்வி கேட்டு கணவனை மடக்குவதை பெண்கள் ரசிக்கிறார்கள். ஆனால், ஆண்கள் அதிகம் வெறுப்பது கேள்விகளைத்தான். அதனால்தான் கணவன், மனைவி உறவில் இடைவெளி விழுகிறது.
2. தந்திர வலை: ‘உங்களுக்கு எங்கேயாவது வெளியில் போற வேலை இருக்கா?’ என கேள்வி கேட்டு, 'ஆமாம்' என்ற பதில் வந்தால், ‘நானும் வர்றேன்’ என்று சொல்லிவிட்டு, ஏதாவது ஃபேன்சி ஸ்டோர் போகலாமா? என்று தந்திர வலை விரித்து கூட சிக்க வைப்பதை ஆண்கள் விரும்புவதில்லை. நேரடியான கேள்விகளையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
3. எப்போதும் பேச்சு: சின்னச் சின்ன வீட்டுப் பிரச்னைகளை பெண்கள் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், வெளியில் எழும் பெரிய பிரச்னைகளை தங்களால் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் ஆண்கள் நம்புகிறார்கள். அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே அர்த்தம் உள்ள உரையாடல்களை ஆண்கள் விரும்புகிறார்கள்.
4. எதிர்பார்ப்புகள்: நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை தங்கள் மீது திணித்து அழுத்தம் தருவதை ஆண்கள் விரும்புவதில்லை. ‘என்ன செய்வீங்களோ தெரியாது? இந்த மாதிரிதான் வீடு வேண்டும்’ என்றும் பெரிய பட்ஜெட் போட்டுத் திணித்தால் ஆண்கள் விழி பிதுங்கிப் போவார்கள். அப்படி பல எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு மன அழுத்தம் தருவதாகவே இருக்கின்றன.
5. ஆண்கள் பேச்சு: ஆபீஸ், நட்பில் உள்ள ஆண்களைப் பற்றிய மனைவியின் பேச்சுக்களை பல ஆண்கள் விரும்புவதில்லை. அவை களங்கமற்றதாக இருந்தாலும், தனது வாழ்க்கைத் துணையில் தங்களிடம் மட்டும்தான் நட்பாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு ஆண்களுக்கு மட்டும் உண்டு.
6. எல்லாவற்றுக்கும் தேடுவது: ஒரு நாளைக்கு பத்து முறையாவது கணவனை அழைக்கும் பெண்கள் உண்டு. ஒரு கட்டத்தில் இது உதவி என்ற வரம்பை தாண்டி கட்டளையாக மாறி விடுவதாக, ஆண்கள் எரிச்சல் அடைகிறார்கள். வெளியில் போன பிறகும் போனில் தொடரும் இதுபோன்ற கோரிக்கைகள் கிட்டத்தட்ட கண்காணிப்பு கேமரா போன்றவை என சந்தேகிக்கும் ஆண்கள் அதிகம் உண்டு.
7. ஃபோனில் பேச்சு: ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்று படித்திருக்கிறோம். ‘பக்கத்து வீட்ல என்ன நடந்துச்சு தெரியுமா? வீட்டுல என்ன நடந்தது தெரியுமா? தெருவில் என்ன நடந்தது தெரியுமா?’ என்றெல்லாம் பல விஷயங்களைப் பேசுவதைக் கேட்பது பலஆண்களுக்கு போர் அடிக்கிறது. ஆண்களின் ஆர்வ ஏரியா என்பது வேறு. இது புரியாமல் நிகழ்த்தப்படும் போன் உரையாடல்கள் ஆண்களுக்கு எரிச்சல் தரும்.
8. குத்தல் பேச்சு: எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும் ஆண்கள், குத்தல் பேச்சுகளில் நொறுங்கிப் போவார்கள். ‘உங்களைக் கட்டிக்கிட்டு என்ன சுகம் கண்டேன், வெளியில ஏதாவது விசேஷத்துக்கு கூட்டிட்டு போயிருக்கீங்களா?’ என்ற புலம்பலே காரணம்! அதுவும் மூன்றாம் நபர் எதிரில் என்றால் இன்னும் ஆழமான காயம் மனதில் ஏற்பட்டு விடும். இது ஆண்களுக்குப் பிடிக்காது.
9. ஒரே செயலை திரும்பத் திரும்ப வலியுறுத்துவது: எதையும் தள்ளிப்போடுவது ஆண்களின் குணம். நினைத்த விஷயத்தை உடனே செய்ய நினைப்பது பெண்களின் இயல்பு. ஒரு சாதாரண விஷயத்தை இப்போதே முடிக்க வேண்டும் என எதிர்பார்த்து, அதற்காக திரும்பத் திரும்ப அந்த செயலை வலியுறுத்துவது ஆண்களை திக்கு முக்காட வைத்து கோபத்தை வரவழைக்கும்.
10. திரும்பத் திரும்ப சொல்லும் வார்த்தை: பல பெண்களுக்கு சொன்ன விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லும் இயல்பு இருக்கிறது. சொன்ன விஷயம் நடக்காதபோது, தாங்கள் சொன்னது புரியவில்லையோ? என்று சந்தேகித்து திரும்பச் சொல்லி அதுவே பழக்கமாய் இருக்கும். ஆனால், கேள்விகளும் கட்டளைகளும் திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லும்போது ஆண்கள் ஆக்ரோஷமாகி பேச மறுத்து, சண்டையில் முடிகிறது.
எந்த விஷயத்தையும் கணவன், மனைவி இருவரும் தீர ஆலோசித்து முடிவு எடுத்து பேசினால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வராது.