
ஒருவருடைய உறவு வலுவாகவும் நீடித்து இருக்கவும் விரும்பினால் சில விஷயங்களைச் செய்ய வேண்டும்; சிலவற்றை விட்டு விட வேண்டும். ஒருவருடைய உறவு 20 வருடங்களுக்கும் மேலாக நீடித்து இருக்கக் கடைபிடிக்க வேண்டிய 10 பழக்க வழக்கங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. உறவு நீண்ட காலம் நிலைத்து நிற்க ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்குங்கள். ஏனெனில், உறவின் ஈர்ப்புக்கு முன்னுரிமை என்பது மிகவும் அவசியம்.
2. உங்களுடைய கூட்டாளரிடம் விரும்பும் நல்ல விஷயங்களை அவரிடம் சொல்லி நன்றி தெரிவிப்பதோடு, அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கூட்டாளரிடம் சொல்ல வேண்டும்.
3. அவர்கள் சொல்வதை கவனமாகக் கேட்பதோடு, நேரம் எடுத்து மனம் திறந்து கேள்விகளை கேட்டு அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த உலகில் திசை திருப்பப்படுவது என்பது மிகவும் எளிதானது.
4. உங்களுக்கு என்ன தேவை என்பதை மிகவும் நேர்மையாகவும் தெளிவாகவும் நேராகக் கூற வேண்டும். ஏனெனில் அவர்கள் உங்கள் மனதை புரிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்தி உங்களுக்குள்ளேயே வெளிப்படையாக பேசப் பழகிக்கொள்ள வேண்டும்.
5. மன்னிப்பதையும், மறப்பதையும், கைவிடுவதையும் தொடர்ந்து செய்ய வேண்டும். மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்கள் என்பதால் தவறுகளை பிடித்துக் கொண்டால் பொறாமையைத் தவிர வேறு எதுவும் வளராது.
6. தனியாகச் சென்று காரியங்களைச் செய்வதோடு அதை சொந்தமாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், உறவில் மட்டுமல்ல உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேரத்தை ஒதுக்குவது மிகவும் நல்லது.
7. உறவு எப்படிப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதோடு பிரச்னைகள் பெரிதாவதற்கு முன்பு ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும்.
8. அவர்கள் வீட்டிற்கு வரும்போது அரவணைக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், விலகிச் செல்லும் பழக்கம் உறவுக்குக் கடினமாக இருக்கும்.
9. பெரிய குழந்தைகளைப் போல வேடிக்கையான விஷயங்களைச் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து அனுபவித்து உறவை வளர்க்க வேண்டும்.
10. நீங்கள் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். அதாவது, தவறு செய்யும் நேரங்களிலும் நேர்மையுடன் இருப்பது நம்பிக்கைக்கு அடித்தளமாக அமையும்.
மேற்கூறிய 10 ஆலோசனைகளையும் கடைபிடிக்க வாழ்நாள் முழுவதும் நாம் கொண்ட உறவு உறுதியாக இருக்கும்.