மாணவர்கள் ஈசியா சம்பாதிக்க 10 வழிகள்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாக்கெட் பணத்திற்கு பெற்றோரிடம் கேட்காமல், சரியான திட்டமிடுதல் மூலம் 10 வழிகளில் வருமானம் ஈட்டலாம்.
students to earn easy money
students to earn easy money
Published on

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சில தேவைகளுக்கு பாக்கெட் பணம் தேவைப்படுகிறது. இதற்கு அடிக்கடி பெற்றோரிடம் கேட்காமல், சரியான திட்டமிடுதல் மூலம் 10 வழிகளில் வருமானம் ஈட்டலாம். அவற்றை இப்பதிவில் காணலாம்.

1. ஃப்ரீலான்சிங் (Freelancing)

எழுத்து, வடிவமைப்பு, வீடியோ எடிட்டிங் மற்றும் கோடிங் திறன் இருந்தால் ஃப்ரீ லான்சிங் மூலம் Fiverr, Upwork மற்றும் Freelancer போன்ற இணையதளங்களில் உங்கள் சுயவிவரத்தை உருவாக்கி வேலை தேடி ஒரு மணி நேரத்திற்கு ரூ.300-ரூ.500 வரை எளிதாக சம்பாதிக்கலாம்.

2. ஆன்லைன் பயிற்சி (Online Tuition)

ஏதாவது ஒரு பாடத்தில் உங்களுக்கு நல்ல பிடிப்பு இருந்தால், Vedantu மற்றும் Unacademy போன்ற தளங்களில் பதிவு செய்து ஆன்லைன் ஆசிரியராக மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.500-ரூ.800 வரை சம்பாதிக்கலாம்.

3. சமூக ஊடக கையாளுதல் (Social Media Handling)

சமூக ஊடகங்களை இயக்க ஆர்வம் உள்ளவர்கள் இன்ஸ்டா-பேஸ்புக் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம். பல சிறிய வணிகங்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் உள்ளடக்கம் இடுவது, கருத்துக்களுக்கு பதிலளிப்பது மற்றும் பக்க வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்குவது போன்ற தங்கள் கணக்குகளை கையாள மக்களை நியமிக்கிறார்கள். இதற்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 500-1000 ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.

இதையும் படியுங்கள்:
புத்தகம் படித்து பணம் சம்பாதிக்க 20 வழிகள் - வீட்டிலிருந்தே சம்பாதிப்பது எப்படி?
students to earn easy money

4. உள்ளடக்க எழுத்து (Content Writing)

எழுத்து ஆர்வம் இருந்து வார்த்தைகளால் அற்புதங்களை செய்தால் வலைப்பதிவுகள், இணையதளங்கள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சிகளுக்கு உள்ளடக்கத்தை எழுதுவதன் மூலம் ஒவ்வொரு கட்டுரைக்கும் 500-1500 ரூபாய் வரை பெறலாம்.

5. யூடியூப் அல்லது பிளாக்கிங் (Youtube or Blogging)

உங்களிடம் தனித்துவமான அறிவு, திறன் மற்றும் பொழுதுபோக்கு திறமை இருந்தால் youtube சேனல் மற்றும் வலைப்பதிவை தொடங்கி வருமானம் ஈட்டலாம். ஆரம்ப காலம் சிறிது கடினமாக இருந்தாலும் பயனர்கள் வந்தவுடன் விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் ரூ.500 முதல் வரம்பற்ற வருமானத்தை உருவாக்க முடியும்.

6. ஆன்லைன் சர்வே மற்றும் மொழிபெயர்ப்பு (Online Surveys and Translations)

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்தால் மொழிபெயர்ப்பு செய்வதன் மூலம் Swagbucks, Toluna மற்றும் Google Opinion Rewards போன்ற இணையதளங்கள் ஆன்லைன் சர்வேக்கு பணம் கொடுப்பதால் ஒவ்வொரு சர்வே அல்லது மொழிபெயர்ப்பிற்கும் ரூ.500 முதல் ரூ.700 வரை சம்பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கதை சொல்லி பணம் சம்பாதிக்க 13 வழிகள்: எப்படின்னு தெரியுமா?
students to earn easy money

7. புகைப்படம் எடுத்தல் (Photography)

புகைப்படம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் உங்களுடைய சிறந்த புகைப்படங்களை Shutterstock, Adobe Stock மற்றும் Getty Images இல் விற்கலாம். இங்கு புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூ.500-ரூ.1000 வரை சம்பாதிக்கலாம்.

8. தரவு உள்ளீடு (Data Entry)

லேப்டாப் மற்றும் இணையம் இருந்தால், தரவு உள்ளீடு, படிவம் நிரப்புதல் மற்றும் மைக்ரோ ஜாப்ஸ் செய்வதன் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

9. கையால் செய்யப்பட்ட பொருட்கள் (Handmade Products)

நீங்கள் கிரியேட்டிவாக வாழ்த்து அட்டைகள், ஓவியங்கள், கையால் செய்யப்பட்ட நகைகள் உருவாக்குபவராக இருந்தால் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் விளம்பரப்படுத்தி குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

10. வீடியோ எடிட்டிங் (Video Editing)

வீடியோ எடிட்டிங்கில் ஆர்வம் இருந்து ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வைத்து இந்த திறமையைப் பயன்படுத்தி சமூக ஊடகத்திற்கான உள்ளடக்கத்தை உருவாக்கி வெவ்வேறு திட்டங்களில் வேலை செய்து நல்ல வருமானம் ஈட்டலாம்.

மேற்கூறிய 10 வழிகளிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வைத்து சம்பாதிக்க முடியும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

இதையும் படியுங்கள்:
சுலபமாக பணம் சம்பாதிக்க வேண்டுமா? அப்போ இந்தக் கதை உங்களுக்குத்தான்!
students to earn easy money

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com