மனதில் மகிழ்ச்சியை பெருகச் செய்யும் 11 பழக்கங்கள்!

Happy girl
Happy girl
Published on

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான காரியங்களைச் செய்கின்றனர். ஆனால், நிறைவான வாழ்க்கையை வாழ உதவும் சில உலகளாவிய செயல்கள் உள்ளன. அன்றாட வழக்கத்தில் சில விஷயங்களைச் செய்வதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருக்கலாம்.

1. படுக்கை அறை: இது உங்கள் வீட்டில் எப்போதும் தாயார் சொல்லும் விஷயம் தான். காலையில் எழுந்தவுடன் படுக்கையை சுத்தமாக மாற்றவும். தலையணை, விரிப்பான்களை சரி செய்த பிறகு படுக்கை அறையை விட்டு செல்லுங்கள். இதை நீங்கள் காலையில் முதல் வேலையாக செய்யும்போது எதையோ சாதித்தது போல உணர்வீர்கள். மகிழ்ச்சி என்பது சிறிய வெற்றிகளில் இருந்தே தொடங்குகிறது.

2. உடற்பயிற்சி: எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவறவிடாதீர்கள். உடற்பயிற்சி செய்து உடலில் இருந்து வியர்வை வெளியேறும்போது நீங்கள் பெரும் வித்தியாசத்தை உணர்வீர்கள். பிடித்தமான பாடல்களைக் கேட்டுக்கொண்டே உடற்பயிற்சி செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது இன்னும் சில நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யலாம் என தோன்றும்.

3. திட்டமிடல்: உங்கள் நாளைத் தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டியவற்றின் பட்டியலை உருவாக்கி அதை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். இதைத் திறம்படப் பயிற்சி செய்வது நீங்கள் ஒழுங்காக இருக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.

4. நண்பர்களுடன் சுற்றுதல்: உங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு வெளியே சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா அல்லது தொலை தூரப் பயணங்கள் மேற்கொள்ள திட்டம் இருக்கிறதா எனக் கேளுங்கள். இந்த சந்திப்புகளின்போது நீங்கள் மனதளவில் புத்துணர்சி பெறுவீர்கள். இது உங்கள் நெருங்கிய வட்டத்துடன் புதுப்பித்துக் கொள்ளவும் ஒரு சிறந்த வழியாகும்.

5. டைரி எழுதுவது: உங்கள் எல்லா உணர்வுகளையும் ஒரு டைரியில் எழுதுங்கள். இது உங்கள் எண்ணங்களை புதுப்பித்து, ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தவும், ஒரு செயலை முன்பை விட சிறப்பாக செயலாக்கவும் உதவும்.

6. புத்தக வாசிப்பு: நீங்கள் புத்தகப் பிரியர் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால், நீங்கள் அதை மாற்றத் தயாராக இருந்தால், தினமும் ஐந்து நிமிடங்கள் புத்தகம் படிக்கத் தொடங்குங்கள்.

7. பிரதிபலிப்பு: உங்கள் இலக்குகளை பிரதிபலிக்க தினமும் ஐந்து நிமிடங்கள் செலவிடுங்கள். தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய முன்னேற்றத்துடன் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை சிந்திக்கவும்.

8. நல்ல தூக்கம்: நீங்கள் நன்றாக ஓய்வெடுக்கும்போது, அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள். நல்ல தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறன், மனநிலை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம், குடிக்கக் கூடாது? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Happy girl

9. புன்னகை: நீங்கள் சிரிக்கும்போது அது உங்களையும் மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகிறது. எனவே, வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் சிரிக்கவும்.

10. தியானம்: தவறாமல் தியானம் செய்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும். இது அமைதி மற்றும் சமநிலை உணர்வைத் தரும். இது உங்கள் மனதை அமைதியாக்கவும், நிகழ்காலத்தில் கவனம் செலுத்தவும், சவாலான சூழ்நிலைகளுக்கு புதிய கண்ணோட்டத்தைப் பெறவும் உதவுகிறது.

11. உதவி: ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு உதவ நமக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. சிறு சிறு விஷயங்களில் உதவுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com