அன்றாட வாழ்வில் உதவும் 15 கேபிள் டை டிப்ஸ்!

Cable Tie
Cable Tie
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கேபிள் டைகள் (Cable Tie), ஜிப் டைகள் (Zip ties) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை அளவில் சிறியவை. ஆனால் நம்ப முடியாத அளவிற்கு பல வகையில் பயன்படுத்தக் கூடியவை. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பது போல இதன் பயன்பாடு அளவிடற்கரியது.

  • இடத்தை மிச்சப்படுத்தும் அலமாரி ஹேங்கர் - அதிக ஹேங்கர்களைத் தொங்கவிடக்கூடிய செங்குத்து ஹேங்கர் அமைப்பை உருவாக்குவதற்கு, துணி ஹேங்கரைச் சுற்றி பல கேபிள் டைகளை அமைக்கலாம்.

  • பவர் கார்டுகள், சார்ஜர்கள் மற்றும் பிற கேபிள்களைக் கட்டவும் ஒழுங்கமைக்கவும் கேபிள் டைகளை பயன்படுத்தலாம்.

  • சன் கிளாஸ்கள் அல்லது நகைகள் போன்ற சிறிய ஆபரணங்களுக்கு ஒரு ஹேங்கரை உருவாக்க இணைக்கப்பட்ட கேபிள் டைகளின் சங்கிலியைப் பயன்படுத்தலாம்.

  • கேபிள் டையை தற்காலிக பூட்டாகப் பயன்படுத்தி பயணத்திற்கான சாமான்கள் அல்லது பைகளை பாதுகாக்க உபயோகிக்கலாம்.

  • வீட்டில் உள்ள டிவி ரிமோட் கீழ விழுந்து உடைந்தாலோ, பிள்ளைகள் சண்டையில் போட்டு உடைத்தாலோ பாதி உடைந்து தொங்கிக் கொண்டிருக்கும். ரப்பர் பேண்ட் சுற்றி வைத்தாலும் பிள்ளைகள் அதனை நோண்டி எடுத்து விடுவார்கள். எனவே இந்த கேபிள் டையை பயன்படுத்தி மேலும் உடையாமல் டைட்டாக கட்டி பாதுகாக்கலாம்.

  • சாவிகளை ஒன்றாக ஒரே இடத்தில் வைத்துக் கொண்டால் காலை அவசரத்தில் தேட வேண்டிய அவசியம் இருக்காது. எனவே அனைத்து சாவிகளையும் ஒரே இடத்தில் வைத்திருக்க, சாவி வளையத்திற்கு விரைவான மாற்றாக இந்த கேபிள் டையைப் பயன்படுத்தலாம்.

  • வடிகால் அடைப்புகளை தடுப்பதற்கு இந்த கேபிள் டையை உபயோகப்படுத்தலாம். ஒரு கேபிள் டையில் சில வெட்டுக்களை வெட்டி, முடி மற்றும் பிற குப்பைகளை வடிகாலில் இருந்து இழுத்து, அது அடைபடாமல் இருக்க பயன்படுத்தலாம்.

  • பைகளின் (Bag), சூட்கேஸ்களின் ஜிப்புகள் உடைந்து விட்டால் அதனை திறந்து மூடுவது சிரமமாக இருக்கும். அம் மாதிரியான சமயங்களில் உடைந்த ஜிப்புகளின் உள்ளே இந்த கேபிள் டையை நுழைத்து தேவையான அளவிற்கு வைத்து மீதமுள்ள பகுதியை வெட்டி விட்டால் பேகை திறந்து மூட மிகவும் எளிதாக இருக்கும்.

  • கேபிள்களை ஒன்றாகக் கட்டுவதற்கு கேபிள் டைகளைப் பயன்படுத்தலாம். இது கணினி, டிவி அல்லது பிற மின்னணு சாதனங்களுக்கு அருகில் உள்ள கேபிள்களை நேர்த்தியாக வைத்திருக்க உதவும்.

  • ஒரு கேபிள் டை போதுமான அளவு நீளம் இல்லையென்றால், மற்றொரு டையின் நுனியை முதல் டையின் வால் பகுதியில் செருகி நீளமாக்கலாம். இது மிகவும் குறுகிய கேபிள்களை இணைக்க உதவுகிறது.

  • வீட்டு உபயோகப் பொருட்களை ஒழுங்கமைக்க கேபிள் டைகளைப் பயன்படுத்தலாம். சமையலறை பாத்திரங்கள், பேனாக்கள் அல்லது கைவினைப் பொருட்கள் போன்றவற்றை ஒன்றாகக் கட்ட உபயோகிக்கலாம்.

  • கேபிள் டையை பயன்படுத்தி இலகு ரகப் பொருட்களை அழகாக தொங்க விடலாம். அதற்கு இந்த கேபிள் டையை ஒரு வளையமாகப் பயன்படுத்தி அதிக கனமில்லாத பொருட்களை மாட்டலாம் அல்லது தொங்கவிடலாம்.

  • சில கேபிள் டைகளில், டையை தளர்த்த அல்லது அகற்ற ஒரு தாவல் (tab) இருக்கும். இதனால் அதை மீண்டும் பயன்படுத்தலாம்.

  • துருப் பிடிக்காத எஃகு கேபிள் டைகள் (stainless steel) வெளிப்புற பயன்பாடுகளுக்கு ஏற்றது. ஏனெனில் அவை அரிப்பை எதிர்க்கும். நிறமுடைய கேபிள் டைகளைப் பயன்படுத்தி, வெவ்வேறு வகையான கேபிள்களை தனித்தனியாக அடையாளப்படுத்தலாம்.

  • ஒரு சிறிய கேபிள் டை தற்காலிக சாவி வளையமாக செயல்படுவது போல், ஒரு மெல்லிய கேபிள் டை அவசரகால மாற்றாக தற்காலிகமான ஷூ லேஸாக உருவாக்கலாம்.

    அவசரமாக வெளியே சென்று கொண்டிருக்கும் பொழுது நம்முடைய பெல்ட் உடைந்தால் கவலைப்படாமல் ஒரு கேபிள் டையை அவசரகால தீர்வாகப் பயன்படுத்தலாம். உடைந்த பகுதி வழியாக அதை லூப் செய்து தற்காலிகமாக பயன்படுத்தலாம்.

இவ்வளவு பயன் தரும் இந்த கேபிள் டையை வாங்க...
logo
Kalki Online
kalkionline.com