
ஒருவரின் வாழ்வில் பெரும் பங்கு வகிப்பது அவர் பார்க்கும் வேலை. ஒரு மனிதர் தனது வாழ்நாளில் ஏறத்தாழ 90,000 மணி நேரத்தை வேலையில் செலவிடுகிறார். வேலை செய்யும் இடங்களில் ஒருவர் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. வேலை செய்யும் இடத்தில் யாரையேனும் ஒருவரை அல்லது பலரை குறை பேசுவது அல்லது புரணி பேசுவது.
2. எப்போதும் வேலை பார்க்கும் இடத்தில் தவறுகள் அதிகமாக நடப்பதாக குற்றச்சாட்டு கூறுவது அல்லது எப்போதும் எதிர்மறையாகப் பேசுவது.
3. வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற நேரத்தில், தேவையற்ற கூட்டங்கள் போடுவது.
4. வேலை செய்யும் நேரத்தில் செல்போன்களில் சோசியல் மீடியாவை அடிக்கடி பார்ப்பது.
5. வேலை செய்யும் இடத்தில் அன்றைய நாளில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எந்தத் திட்டமிடுதலும். இல்லாமல் ஏனோதானோ என்று வேலை பார்ப்பது.
6. அலுவலகத்தில் உங்களுக்கான வேலையை விட்டுவிட்டு அடுத்தவர்களின் வேலையைப் பார்ப்பது.
7. அலுவலகத்தில் அதிகப்படியான நேரம் காபி, டீ குடிப்பது, அதற்காக அடிக்கடி வெளியே செல்வது.
8. வேலை சம்பந்தமாக வரும் இமெயில்களுக்கு தக்க பதில் கொடுக்காமல் இருப்பது.
9. வேலையில் அவசிய உதவி கேட்க வேண்டிய நேரத்தில் அடுத்தவர்களிடம் கேட்காமல் இருப்பது.
10. மீட்டிங் நேரத்தில் தங்களது வேலை தவிர்த்து, மற்றவர்களுக்கு வேலை பார்ப்பது.
11. வேலை பார்க்கும் இடத்தில் குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க காலக்கெடு வைக்காமல் வேலை பார்ப்பது.
12. சின்னச் சின்ன தவறுகளை ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, பிறகு அதுவே பெரியதாக வரும்போது முழிப்பது.
13. எதற்கெடுத்தாலும் 'ஆமாம்' சாமி போடுவது அல்லது மண்டையை ஆட்டுவது.
14. பணி நேரத்தில் வேலையைத் தவிர்த்து பிற வேலைகளைப் பார்ப்பது.
15. சின்னச் சின்ன விஷயங்களில் தலையிட்டு அதை திசை திருப்பும் பழக்கத்தை கடைபிடிப்பது.
மேற்கண்ட இதுபோன்ற விஷயங்களில் நேரடியாக பங்கேற்றாலும் சரி அல்லது மறைமுகமாகப் பங்கு கொண்டாலும் சரி பாதிப்பு உங்களுக்குதான். மேற்படி விஷயங்களில் எதிலும் பங்கு கொள்ளாமல் உங்கள் பணியை மட்டும் சரியாகப் பார்த்தால் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கென்று ஒரு மதிப்பும், மரியாதையும் இருக்கும். பணியில் நீங்கள் விரும்பும் உயர்நிலை உங்களைத் தேடி வரும்.