மனிதன் மனிதனாக இருக்க கடைபிடிக்க வேண்டிய 18 அம்சங்கள்!

Features to follow to live as a human being
Features to follow to live as a human being
Published on

றறிவு படைத்த மனிதன் மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு இருப்பதற்கு முக்கியமான காரணம் மனிதாபிமானம். அந்த வகையில் மனிதன் மனிதனாக வாழ கடைபிடிக்க வேண்டிய 18 அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தாய், தந்தையரை மிகவும் உயர்ந்த இடத்தில் நினைத்து மதிக்க வேண்டும்.

2. நல்ல நாள் பார்த்து வேலை செய்யலாம் என்ற எண்ணத்தை விடுத்து, இன்றைய நாளே நல்ல நாள் என நினைப்பது சிறப்பு.

3. மன்னிப்பு கேட்க வேண்டிய இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டியவரிடம் தயங்காமல் மன்னிப்பு கேட்பதே மிகப்பெரிய வெகுமதியாகும்.

4. எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் நம்மிடம் அவசியம் இருக்க வேண்டியது பணிவு.

5. அடுத்தவரிடம் வெறுப்பு காட்டாமல் இருப்பதே நம்மிடம் உள்ள வேண்டாதது ஆகும்.

6. எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்மிடம் இருக்க வேண்டிய மிகப்பெரிய தேவை நம்பிக்கை.

7. பேராசையை விட்டொழிப்பதே மிகக் கொடிய நோயாகும்.

8. மிகவும் சுலபமான செயலான அடுத்தவரிடம் குற்றம் காண்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

9. மிகவும் கீழ்த்தரமான விஷயமான பொறாமையை பொடிப் பொடியாக்க வேண்டும்.

10. வாழ்க்கையில் நம்பக் கூடாதது வதந்திகளை.

11. அதிகப்படியான பேச்சு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் பேச்சை குறைக்க வேண்டும்.

12. எவ்வளவு இடர்கள் வந்தாலும் அடுத்தவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யவே கூடாது.

13. நம்மிடமிருந்து விலக்கி வைக்க வேண்டிய முதல் குணம் சோம்பேறித்தனமாக இருக்க வேண்டும்.

14. உயர்வான நிலைக்குச் செல்ல உழைப்பை மட்டுமே நம்பி உழைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
புற்றுநோய்க்கு தீர்வாகும் நெய் மிளகாயின் அதிசய குணங்கள்!
Features to follow to live as a human being

15. குண்டூசி அளவு வாய்ப்பாக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது.

16. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரியக் கூடாதது நட்பு மட்டுமே.

17. நன்றியை என்றென்றும் மறக்கவே கூடாது.

18. அடுத்தவருக்கு நாம் அதிகம் செய்ய வேண்டியது உதவி மட்டுமே.

மேற்கூறிய 18 விஷயங்கள் மட்டுமே ஒரு மனிதனை மனிதனாக வைத்திருக்கும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் இதை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com