இந்த 3 அறிகுறிகள் இருந்தால் உங்கள் ரிலேஷன்ஷிப் முடியப்போகுதுன்னு அர்த்தம்! 

3 signs that your relationship is going to end.
3 signs that your relationship is going to end.

இன்றைய காலகட்டத்தில் உறவு முறையைப் பற்றி பலருக்கு சரியான புரிதல் இருப்பதில்லை. நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படித்தான் நாம் விரும்பும் நபரும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதால், பல உறவுகளுக்குள் இன்று விரிசல்கள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒரு கட்டத்திற்குப் பிறகு இருவருக்கும் மத்தியில் குறையை மட்டுமே அதிகம் பார்க்கும் மனநிலை வந்து, செய்யும் அனைத்தையும் தவறாகவே பார்க்க வைத்துவிடுகிறது.

இது எப்படிப்பட்ட நல்ல உறவாக இருந்தாலும் அதைக் கெடுத்துவிடும். இந்த பதிவில் ஒரு உறவுக்கு மத்தியில் விரிசல் ஏற்படப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் என்னவெனப் பார்க்கலாம்.

  1. இன்றைய நவீன காலகட்டத்திலும் உங்களுடைய துணை அல்லது எதிர்காலத்தில் துணையாக மாறப்போகிறவர்களை எந்நேரமும் சந்தேகத்துடனே பார்ப்பது முதல் அறிகுறியாகும். ஒரு உறவுக்கு மத்தியில் மிகப்பெரிய பலமாக இருப்பது நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையே இல்லாதபோது சந்தேகம் உள்ளே நுழைந்து அனைத்தையும் பாழாக்கிவிடும். 

  2. உங்கள் துணை உங்களை நேசிப்பதை உணராமல், தேவையில்லாத காரணங்களைக் கூறி அவர்கள் மீது வீண் வெறுப்பை உணர்வீர்கள். 

  3. குறிப்பாக உங்களது ரிலேஷன்ஷிப்பில் மிகச் சிறப்பான விஷயங்கள் நடந்தாலும் அதை அனுபவிக்கும் அளவுக்கு சுவாரசியம் இருக்காது. ஏதோ ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். 

இந்த மூன்று அறிகுறிகளும் இருந்தால் உங்கள் ரிலேஷன்ஷிப் மிகவும் மோசமாக இருக்கிறது என அர்த்தம். விரைவில் உங்களுக்குள் பல பிரச்சனைகள் ஏற்பட்டு பிரியும் அளவிற்கு செல்லலாம். எனவே அதற்கு முன்பாக அதைத் தவிர்ப்பதற்கான செயலில் இறங்குங்கள். 

இதையும் படியுங்கள்:
Circle to Search: டைப் செய்து இனி எதையும் தேட வேண்டாம்.. வட்டம் போட்டா மட்டும் போதும்!
3 signs that your relationship is going to end.

மோசமான ரிலேஷன்ஷிப் சிறப்பாக மாற என்ன செய்யலாம்? 

நீங்கள் கணவனாக இருந்தால், உங்களது நிதி சார்ந்த விஷயங்களை உங்கள் மனைவியை கையாள விடுங்கள். பெரும்பாலான சமயங்களில் ஆண்கள் நிதி விஷயங்களில் பெண்களுக்கு முதிர்ச்சி இல்லை என எண்ணிக்கொண்டு, அனைத்தையுமே அவர்களே செய்வார்கள். இந்த எண்ண ஓட்டம் முற்றிலும் தவறானது. எனவே கொஞ்ச அதிகாரத்தை பெண்களிடமும் கொடுக்கும்போது உறவுகள் பலமாகும். 

உறவுகளுக்கு மத்தியில் சகிப்புத்தன்மை மிக மிக முக்கியம். நமக்கு கோபம் வந்தால் கண்டபடி பேசி விடக்கூடாது. நீங்கள் உங்களுடைய ரிலேஷன்ஷிப்பை நீண்ட காலம் கொண்டு போக வேண்டுமென்றால் உங்களுக்கு பிடிக்காதபடி உங்கள் துணை நடந்து கொண்டாலும், பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். 

மனிதர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்படுங்கள். எல்லா நேரங்களிலும் உங்கள் துணை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே இருக்க மாட்டார்கள். சில கடினமான சூழ்நிலைகளில் அவர்களுக்கு தனிமை தேவைப்படுகிறது என்றால் அதை புரிந்துகொண்டு நடந்து கொள்ளுங்கள். எல்லா விஷயங்களிலும் டாமினேட்டிங் கேரக்டராக இருப்பதைத் தவிர்க்கவும். 

இப்படி உங்கள் துணைக்கு எது மகிழ்ச்சி அளிக்குமோ, அவர்களை எது சிறப்பாக உணர வைக்குமோ அத்தகைய செயல்களை நீங்கள் செய்யும்போது, எந்த மோசமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். குறிப்பாக “விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை” என்பது ஒவ்வொரு ரிலேஷன்ஷிப்பிற்கும் மிக முக்கியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com