ஆண் சிங்கங்களே! பெண்களுக்கு உங்கள பிடிக்கணுமா? 'சாணக்ய நீதி' சொல்வதை தெரிஞ்சுக்கோங்க!

chanakya niti
chanakya niti
Published on

சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். சாணக்கியர் எழுதிய 'சாணக்கிய நீதி', இன்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில், குறிப்பாக அரசியல், பொருளாதாரம் மற்றும் தனிப்பட்ட உறவுகளில் வழிகாட்டியாக விளங்குகிறது. வாழ்க்கையை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கான பல வழிகளை சாணக்கியர் இந்த நூலில் கூறியுள்ளார்.

சாணக்கியரின் இந்த அறிவுரைகளை நம் வாழ்வில் பின்பற்றினால், மிகப்பெரிய நெருக்கடிகளைக் கூட நாம் எளிதாகக் கடக்க முடியும் என சொல்லப்படுகிறது. அப்படி இந்த நூலில், பெண்கள் எந்த வகை ஆண்களை மதிப்பார்கள், கணவனாக தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வீட்டில் கெட்டது நடப்பதற்கு இதுதான் அறிகுறி... சாணக்கிய நீதி எச்சரிக்கை!
chanakya niti

உண்மையானவர்:

பெண்களிடம் உண்மையை கூறும் ஆண்களையும், நேர்மையாகவும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ளும் ஆண்களையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். வாழ்க்கையில் பொய் என்பது இருக்கவே கூடாது. அதுவும் குறிப்பாக கணவன் - மனைவி உறவுக்குள் நேர்மை என்பது அவசியமாகும்.

நல்ல செயல்கள்:

பொதுவாகவே பெண்கள் ஆண்களின் நல்ல செயல்களை கண்டு ஈர்க்கப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு உதவுவது போன்ற குணங்கள் பெண்களுக்கு பிடிக்குமாம்.

பெண்களை மதிப்பவர்:

பெண்களை மரியாதையுடன் நடத்தும் ஆண்களை பெண்கள் அதிகமாக விரும்புவார்களாம். வாழ்க்கையில் மரியாதை என்பது அனைவருக்கும் முக்கியமானதுதான். ஆனால், சமூகத்தில், பல பெண்களுக்கு ஆண்களிடம் இருந்து மரியாதை கிடைப்பதில்லை. அதனாலேயே அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் ஆண்களை பிடிக்குமாம்.

நம்பிக்கைக்குரியவர்:

சாணக்கியர் நீதிபடி எந்த ஒரு உறவிலும் அன்பை போன்றே நம்பிக்கை மிகவும் முக்கியமானதாகும். அப்படி இருந்தால் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தமுடியும். அப்படி பெண்களை முழு மனதாக ஏற்றுக்கொண்டு நம்பக்கூடிய ஆண்களை மிகவும் பிடிக்குமாம்.

('சாணக்ய நீதிகள்' என்ற புத்தகத்திலிருந்து தொகுப்பு )

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com