chanakiya niti
chanakiya niti

வீட்டில் கெட்டது நடப்பதற்கு இதுதான் அறிகுறி... சாணக்கிய நீதி எச்சரிக்கை!

Published on

சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர். அப்படி வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதன் அறிகுறிகள் குறித்தும் அவர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.

பொதுவாகவே நம் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனை நடக்க போகிறது என்றாலே நம் உள்ளுணர்வுக்கு தெரியும். அப்படி சில பிரச்சனைகளை முன்கூட்டியே அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என சாணக்கிய நீதி கூறுகிறது. அது என்னென்ன அறிகுறிகள் என்று பார்க்கலாம் வாங்க..

சாணக்கியர் நம் வாழ்வுடன் தொர்புடைய பல விஷயங்களை கூறியுள்ளார். அவர் தனது நெறிமுறைகளில் இதை பற்றிய நிறைய எழுதியுள்ளார். அவர் சொல்லும் நெறிமுறைகள் நம் வாழ்வில் இலக்குகளை அடைய தூண்டுகிறது. இதனாலேயே பலர் சாணக்கிய வழியை பின்பற்றி வருகின்றனர். அப்படி நம் வாழ்வில் கெட்ட நேரம் தொடங்கிவிட்டதை எப்படி கண்டுகொள்ளலாம் என சாணக்கியரின் கூற்றை பார்க்கலாம்.

உங்கள் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி தேவி தங்க மாட்டார் என சாணக்கியர் கூற்று கூறுகிறது. இதனால் உங்கள் நிதி நிலை மோசமடைந்து, கெட்ட நேரம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சாணக்ய நீதி கூறும் கணவன் - மனைவி உறவு... வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்?
chanakiya niti

பொதுவாக துளசி செடியை பலர் வீடுகளில் வைத்திருப்பார்கள். ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடி உங்க கெட்ட காலத்தை முன்கூட்டியே உணர்த்தும் என்று சாணக்கியர் கூறுகிறார். அதாவது துளசி செடி வீடுகளில் வாடினால் உங்களுக்கு பொருளாதார பிரச்சனை வரவுள்ளதாக தெரிகிறது. அதனால் துளசி செடி வாடினால் உங்களுக்கான கெட்ட காலத்தை உணர்த்துவதை நினைவில் கொள்ளுங்கள்.

கெட்ட காலம் தொடங்கியதற்கு முக்கிய அறிகுறி இதுதான். பலரது வீடுகளில் இதை உணர்ந்திருப்பீர்கள். வீட்டில் கண்ணாடி உடைவது ஒரு கெட்ட சகுணத்தை பிரதிபலிக்கிறது. சாணக்கியர் கூற்றுபடி வீட்டில் கண்ணாடி உடைந்தால் யாருக்காவது பிரச்சனை வரும் என்று சொல்லப்படுகிறது.

இது போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் நிச்சயமாக கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும். சாணக்கியரின் கூற்றை பலரும் வாழ்க்கையில் பின்பற்றுவதால், இது பலருக்கும் உதவும்.

('சாணக்ய நீதிகள்' என்ற புத்தகத்திலிருந்து தொகுப்பு )

logo
Kalki Online
kalkionline.com