வீட்டுக் கடனைக் கட்ட கஷ்டமா இருக்கா? இந்த 4 டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

Housing Loan
Housing Loan
Published on

வங்கிகளில் அதிகமாக வீட்டுக் கடன் வாங்கும் நபர்கள் தான் அதிகம். இவர்கள் சில யுக்திகளைப் பின்பற்றினால் எந்த சிரமமுமின்றி மாதந்தோறும் இஎம்ஐ கட்டலாம். உங்கள் கஷ்டத்தைத் தீர்க்கும் யுக்திகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.

இன்றைய பொருளாதார உலகில், மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் நிதி நெருக்கடி கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நிலையில் கடன் வாங்குவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் இவர்களின் மாதச் சம்பளத்தில் பெரும்பகுதி இஎம்ஐ கட்டவே செலவாகி விடுகின்றது. அதிலும் வீட்டுக் கடன் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. பல ஆண்டுகளுக்கு இஎம்ஐ கட்டி முடிப்பதற்குள் பாதி வாழ்க்கையே ஓடி விடும்.

மாதந்தோறும் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ கட்ட கஷ்டப்படும் நபர்கள், நிதித் தேவையை அறிந்து அதற்கேற்ப சில யுக்திகளைப் பயன்படுத்தினால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் அதிக சிரமத்தை சந்திக்க காரணமே அதிக வட்டி விகிதம் தான்.

கடன் காலத்தை நீட்டித்தல்:

மாதாந்திர இஎம்ஐ அதிகமாக இருக்கும் பட்சத்தில், அது உங்கள் வீட்டுச் செலவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால், கடன் காலத்தை நீட்டித்து மாதாந்திர இஎம்ஐ தொகையைக் குறைக்கலாம். இருப்பினும் இம்முறையில் வட்டி மேலும் அதிகமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முன்பணம் செலுத்துங்கள்:

வீட்டுக் கடன் சுமையை குறைக்க உதவுவதில் முன்பணம் செலுத்துவது முக்கியப் பங்காற்றுகிறது. உங்களுக்கு திடீரென குறிப்பிட்ட தொகை கிடைக்கும் போது அல்லது ஏதேனும் ஒரு சேமிப்புத் திட்டம் முடிந்து முதிர்வுத் தொகை கிடைக்கும் போது அதனை கடனை அடைக்கப் பயன்படுத்தலாம். இந்தத் தொகையானது வீட்டுக் கடனின் அசல் தொகையில் கழிக்கப்படும். இதுதவிர்த்து கடன் வாங்கும் போது நாம் செலுத்தும் முன் பணத்தை அதிகமாக கட்டினால், மாதாந்திர இஎம்ஐ தொகையில் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை குறையும்.

இதையும் படியுங்கள்:
தங்க நகைக் கடனில் இருக்கும் நன்மைகள் இதோ!
Housing Loan

வட்டி விகிதத்தை அறிதல்:

வீட்டுக் கடனை வாங்குவதற்கு முன்னதாக ஒருசில வங்கிகளில் வட்டி விகிதம் குறித்து விசாரித்து, எந்த வங்கியில் வட்டி குறைவாக உள்ளதோ அங்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம். இதுதவிர கிரெடிட் கார்டு கடனை காலம் தாழ்த்தாமல் கட்டும் நபர்களுக்கு, குறைவான வட்டி விகிதத்தில் சில வங்கிகள் கடன் வழங்கும். ஆகையால் வட்டி விகிதத்தை அறிந்து கொண்டு கடன் பெறுவது, உங்கள் நிதிச் சுமையைக் குறைக்க உதவும்.

கடனை வேறு வங்கிக்கு மாற்றுதல்:

நீங்கள் ஒரு வங்கியில் கடன் வாங்கி இஎம்ஐ கட்டி வந்தால், வட்டி விகிதம் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்தக் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், அப்படி மாற்றும் போது ப்ராசஸிங் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கட்டணம் 0.5% முதல் 1.5% வரை இருந்தால் மட்டுமே கடனை மாற்றிக் கொள்ளலாம். இல்லையெனில் கடனை வேறு வங்கிக்கு மாற்றுவதால் எந்தப் பலனும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com