சமையலுக்கு ஏற்ற 5 சிறந்த பாத்திரங்கள்… ஆரோக்கியத்திற்கு எப்படி நன்மை தரும்?

cooking utensils
cooking utensils
Published on

நாம தினமும் சாப்பிடுற உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதை சமைக்கப் பயன்படுத்தற பாத்திரங்களும் ரொம்ப முக்கியம். பிளாஸ்டிக், நான்-ஸ்டிக்னு பல பாத்திரங்கள் வந்தாலும், சில பாரம்பரிய, இயற்கையான பாத்திரங்கள்தான் நம்ம ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. நம்ம முன்னோர் ஏன் குறிப்பிட்ட பாத்திரங்களை உபயோகிச்சாங்கன்னு யோசிச்சிப் பாருங்க. சமையலுக்கு எந்தப் பாத்திரங்கள் நல்லது, அதனால என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்னு இந்தப் பதிவுல பார்க்கலாம் வாங்க.

1. மண் சட்டி (Clay Pots):

மண் சட்டியில் சமைக்கும்போது உணவு மெதுவா, சீரா வேகும். இதனால, சமையல்ல இருக்கிற சத்துக்கள் வீணாகாம அப்படியே இருக்கும். மண்ணுக்கு இயற்கையாவே ஒரு காரத்தன்மை (Alkaline) இருக்கறதால, உணவோட அமிலத்தன்மையை சமன் செய்யும். இதனால அசிடிட்டி பிரச்சனைகள் குறையும். மண்ணின் நுண்ணிய துளைகள் வழியா காற்று உள்ளே போறதால, உணவு இன்னும் சுவையா இருக்கும்.

2. இரும்பு பாத்திரம் (Iron Cookware):

இரும்பு கடாய், தோசைக்கல் இதெல்லாம் நம்ம வீட்டுல காலம் காலமா பயன்படுத்திட்டு வர்றோம். இரும்பு பாத்திரத்துல சமைக்கும்போது, உணவுல கொஞ்சமா இரும்புச் சத்து சேரும். ரத்த சோகை பிரச்சனை இருக்கறவங்களுக்கு இது ரொம்ப நல்லது. ஆனா, புளிப்பான உணவுகளை இதுல சமைக்கும்போது, இரும்புச் சத்து அதிகமா சேர வாய்ப்பு இருக்கு, அதனால அளவா பயன்படுத்தணும். இது ஒரு தடவை சூடானா, ரொம்ப நேரம் சூட்ட தக்க வச்சுக்கும்.

3. செம்பு பாத்திரம் (Copper Utensils):

செம்பு பாத்திரங்கள்ல தண்ணி குடிக்கிறது ரொம்ப நல்லதுன்னு தெரியும். ஆனா, இதுல சமைக்கறதுக்கு முன்னாடி சில விஷயங்கள் கவனிக்கணும். செம்பு ஒரு சிறந்த வெப்ப கடத்தி, அதனால உணவு சீக்கிரமா சமைக்கப்படும். செம்புல ஆன்டிபாக்டீரியல் பண்புகள் இருக்கு. ஆனா, இதுல அமிலத்தன்மை உள்ள உணவுகளை சமைக்கக் கூடாது. செம்பு பாத்திரங்களை ஈயம் பூசி பயன்படுத்துறது நல்லது. இதுல சமைக்கும்போது, உடலுக்குத் தேவையான நுண்ணிய சத்துக்கள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பாத்திரம் கழுவும் திரவம் முதல் கை கழுவும் திரவம் வரை எல்லாம் தரமானதா?
cooking utensils

4. வெண்கலப் பாத்திரம் (Bronze Utensils):

வெண்கலம், செம்பு மற்றும் தகரம் கலந்த ஒரு உலோகம். இதுலயும் உணவு சமைப்பது ஆரோக்கியமானது. இதுல சமைக்கும்போது உணவோட சத்துக்கள் அப்படியே இருக்கும். இதுவும் செம்பு மாதிரி, சில அமில உணவுகளுக்கு சரியானது கிடையாது. வெண்கல பாத்திரத்துல சமைச்சா, உணவு சீக்கிரமா சூடாகும், அதே சமயம் நீண்ட நேரம் சூட்ட தக்க வச்சுக்கும். இதனால எரிபொருள் மிச்சமாகும்.

5. கண்ணாடி பாத்திரம் (Glass Cookware):

போரோசிலிகேட் (Borosilicate) கண்ணாடி பாத்திரங்கள் ஓவன் மற்றும் மைக்ரோவேவ்ல பயன்படுத்தறதுக்கு ரொம்ப நல்லது. இதுல சமைக்கும்போது, எந்தவித ரசாயனமும் உணவுல கலக்காது. இது முற்றிலும் வேதியியல் ரீதியாக செயலற்றது. உணவுல என்ன சத்துக்கள் இருக்கோ, அது அப்படியே கிடைக்கும். ஈஸியா சுத்தம் செய்யலாம். ஆனா, இது உடையக்கூடியதுங்கிறதால, கவனமா கையாளணும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com