பாத்திரம் கழுவும் திரவம் முதல் கை கழுவும் திரவம் வரை எல்லாம் தரமானதா?

dish wash and hand wash liquid
dish wash and hand wash liquid
Published on

சாப்பிடுகிற தட்டு கழுவுவது முதல், கை கழுவும் வரை அனைத்திலும் நாம் உபயோகிக்கும் சோப்பு கலந்த துப்பரவு திரவங்கள்(washing liquids) உண்மையில் தரமானவையா? அதை எப்படி கண்டுபிடிக்கலாம்?

கிருமிகளை அகற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் அத்தியாவசியப் பொருட்களான சந்தையில் விற்கும் அனைத்து சோப்பு திரவங்களும் நமக்கு பயனுள்ளதா என்றால், அது இல்லை. பெரும்பாலான வணிகப் பொருட்கள் பாக்டீரியா, வைரஸ்களை அகற்றுவதாக அவர்களின் விளம்பரங்களில் கூறினாலும், அவற்றின் செயல்திறன் அதில் பயன்படுத்தியிருக்கும் மூலப்பொருட்களைப் பொறுத்தே அமையும்.

சுத்தம் செய்யும் திரவம் (Washing liquid) கிருமிகளை திறம்பட அகற்ற அதில் சில முக்கியப் பொருட்கள் இருக்க வேண்டும். சோடியம் லாரில் சல்பேட்(sodium lauryl sulfate) அல்லது சோடியம் லாரத் சல்பேட்(sodium laureth sulfate) போன்றவை அழுக்குகளை வெளியேற்ற உதவுகின்றன.

பென்சல்கோனியம் குளோரைடு(benzalkonium chloride) அல்லது குளோரெக்சிடின் குளுக்கோனேட்(chlorhexidine gluconate) போன்ற விஷயங்கள் பாக்டீரியா, வைரஸ்களை விரட்ட முக்கியமானவையாக இருக்கின்றன. அதோடு கிளிசரின்(glycerin) போன்ற ஈரப்பதத்தை தரும் பொருட்கள், சரும வறட்சியைத் தடுக்கின்றன. இதனால் இவை இருக்கும் திரவங்கள் பாதுகாப்பானவை.

லேபிளில் குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் உண்மையிலேயே உள்ளதா?

உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் பொருட்களில் ஒட்டி இருக்கும் லேபிள்களில் அதில் சேர்த்துள்ள விஷயங்களைப் பட்டியல் இடுவார்கள். ஆனால், நுகர்வோராக நம்மால் அவற்றின் நம்பகத்தன்மையை எவ்வாறு சரிபார்க்க முடியும்? அதற்கு நாம் சுகாதாரத் தரங்களுடன்(health standards) இருப்பதை உறுதி செய்யும் Bureau of Indian Standards (BIS)ஆல் வழங்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் சான்றிதழ்களை(certifications from regulatory bodies) சரிபார்ப்பது ஒருவித வழி.

நம்மால் செய்யப்படும் சில ஆய்வகச் சோதனையும்(Laboratory testing) பொருட்களில் உள்ள கெமிக்கல்சின்(chemicals) இருப்பை உறுதி செய்ய முடியும். இறுதியில் தயாரிப்பின் செயல்திறனைக் கவனிக்க வேண்டும். அது போதுமான நுரையை உருவாக்குகிறதா? அழுக்கை திறம்பட நீக்குகிறதா? போன்ற சோதனைகள் மூலம், அதில் சேர்த்துள்ள விஷயங்களை நம்மால் உணரமுடியும்.

சுத்தம் செய்யும் திரவத்தை வீட்டில் உருவாக்க முடியுமா?

ஆம்! வீட்டில் தயாரிக்கப்பட்ட பாத்திரம் கழுவும் திரவம், கை கழுவும் திரவங்களை இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கலாம். காஸ்டில் சோப்பு(castile soap), தண்ணீர், நறுமணத்திற்காக அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தி ஒரு எளிய கை கழுவும் திரவியத்தை(Hand washing liquids) தயாரிக்கலாம். வினிகர்(vinegar) அல்லது எலுமிச்சை சாறு சேர்ப்பது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை மேம்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
இயற்கையின் அதிசயமான குகைகளின் பல்வேறு வடிவங்கள்!
dish wash and hand wash liquid

பாத்திரம் கழுவுவதற்கு பேக்கிங் சோடாவுடன்(baking soda), பிற தரமான பாத்திரம் கழுவும் சோப்பை சேர்த்து அழுக்கு, கிருமிகளை அகற்ற முடியும். இருந்தாலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் பொருட்கள் வணிகப் பொருட்களைப்போல சக்தி வாய்ந்ததாக இல்லாவிட்டாலும் அவை இயற்கையான முறையில் ரசாயனமற்ற தீர்வைத் தரும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தேசிய மலருக்கு ஆனி மாதம் சீசன் காலம்!
dish wash and hand wash liquid

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com