இரவில் ஜீன்ஸ் உடை அணிந்து உறங்குவதில் உள்ள 5 ஆபத்துக்கள்!

ஜீன்ஸ் பேண்ட் அணிந்து உறங்கும் ஆண்
ஜீன்ஸ் பேண்ட் அணிந்து உறங்கும் ஆண்
Published on

வீன உலகின் மிகவும் பிரபலமான ஃபேஷன் ஆடைகளில் ஒன்று ஜீன்ஸ். ஆண், பெண், சிறியவர், பெரியவர் என வயது வித்தியாசமின்றி அனைவரும் இதை அணிந்திருப்பதைக் காணலாம். அது மட்டுமின்றி அணிவதற்கும் இது வசதியாக உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ஜீன்ஸ் ஆடைகளை எப்போது அணியலாம், எப்போது அணியக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜீன்ஸ் ஆடைகளை நீங்கள் எப்போதும் அணிபவர் என்றால் அதனால் சில கடுமையான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நாள் முழுவதும் அணிந்து கொண்டிருக்கும் இந்த ஜீன்ஸ் உடைகளை இரவில் உறங்கப்போகும் முன்பு தவிர்த்துவிடுவது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. அதை விடுத்து இரவில் உறங்கும்போதும் இந்த ஜீன்ஸ் உடைகளை அணிவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

1. பூஞ்சை தொற்று: ஜீன்ஸ் டெனிம் துணியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த துணி நம் உடலில் இருந்து வியர்வையை உறிஞ்சாது. எனவே, ஜீன்ஸ் அணியும்போது,​வியர்வை நமது பிறப்புறுப்பு, தொடை மற்றும் கால்களில் தங்குகிறது. இரவில் இதை அணிவதால் பூஞ்சை தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

2. சரும வெடிப்பு: இறுக்கமான ஜீன்ஸ் ஆடை அணிந்து உறங்குவதால் உடலுக்கு சரியான காற்று சுழற்சி கிடைக்காது. இதனால் சருமத்தில் அரிப்பு, சொறி, சிவத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, முடிந்த வரை குறைந்த நேரம் மட்டும் ஜீன்ஸ் அணிவது ஆரோக்கியத்துக்கு நல்லது. அதிக வியர்வை உள்ளவர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய அவசியம்.

3. உடல் வெப்பநிலை: பொதுவாக, தூங்கிய சில மணி நேரங்களில் உடலின் வெப்ப நிலை படிப்படியாகக் குறைகிறது. இருப்பினும், ஜீன்ஸ் அணிந்து உறங்கும்போது, ​​காற்று சுழற்சி குறைவாகவும், உடல் வெப்பநிலை அதிகமாகவும் ஏற்பட்டு தூக்கத்தை சீர்குலைக்கும்.

இதையும் படியுங்கள்:
லைகோபீன் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு ஏன் அவசியம் தெரியுமா?
ஜீன்ஸ் பேண்ட் அணிந்து உறங்கும் ஆண்

4. கடுமையான வலி: ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடையில் உறங்குவதால், கருப்பை, வயிறு மற்றும் பிறப்புறுப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டம் தடைபடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

5. செரிமான பிரச்னை: இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து உறங்குவதால் சிலருக்கு வயிற்று வலி, அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொல்லை போன்ற செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, முடிந்தவரை ஜீன்ஸ் அணிந்து உறங்குவதை தவிர்த்து விட்டு, தளர்வான காட்டன் உடையில் உறங்குவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

இனி, இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு குட் நைட் சொல்வதற்கு முன்பு ஜீன்ஸ் உடைகளுக்கு குட் பை சொல்லிவிட்டு உறங்கச் செல்லுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். பல உடல் நலப் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com