உங்கள் லிவிங் ரூமை இன்னும் அழகாக்க அசத்தலான 5 DIY டிப்ஸ்கள்!

living room decoration
living room DIY Tips
Published on

வீடு என்பது ஒவ்வொருவரையும் மன நிம்மதியுடன் ஓய்வெடுக்க மற்றும் குடும்பத்துடன் மகிழும் உணர்வுமிக்க இடமாகும். அத்துடன் வீட்டிற்கு வருபவர்களையும் மகிழ வைக்கும் வண்ணம் லிவிங் ரூம் எனப்படும் ஹால் அழகுடன் அமைந்திருந்தால் அதுவே அந்த வீட்டுக்கு சிறப்பு சேர்க்கும். பொதுவாக, பொருட்களை அதற்குரிய இடங்களில் தூய்மையாக, நேர்த்தியுடன் வைத்தாலே பாதி அழகு வந்து விடும். அத்துடன் நமது கற்பனைக்கேற்ப நாமே செய்த அல்லது கடைகளில் வாங்கிய கலைப்பொருட்கள் நமது ஹாலை அலங்கரிக்கும்போது வீட்டுக்கு மேலும் ஒரு பெருமைமிகு அந்தஸ்து கிடைக்கும். லிவிங் ரூமை அழகுபடுத்த 5 வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. DIY சுவர் கலை (Wall Art): கேன்வாஸ் பலகைகள் மற்றும் அக்ரிலிக் வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தி கவர்ச்சி மிக்க சுவர் கலையை உருவாக்கவும். டைனமிக் காட்சிகளை உருவாக்க ஸ்பிளாட்டரிங் அல்லது மார்பிள் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி செய்து பாருங்கள். உங்கள் கற்பனையை பிரதிபலிக்கும் தனித்துவமான கலை வடிவங்களை உருவாக்க மீதமான துணி அல்லது மலிவான ஜவுளிகளையும் பயன்படுத்தி வருபவரை புதுமையால் வியக்க வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஆண்களே கவனம்! மடியில் லேப்டாப், பேண்ட் பாக்கெட்டில் செல்போன்... உங்க எதிர்கால சந்ததிக்கே ஆபத்து!
living room decoration

2. மிதக்கும் அலமாரிகள் (Floating Shelves): புத்தகங்கள், சிறு தாவரங்கள் அல்லது அலங்காரப் பொருட்கள் லிவிங் அறையின் அழகை மேம்படுத்தும். தற்போது  மரத்தால் செய்யப்பட்ட நவீன மிதக்கும் அலமாரிகள் இதற்கெனவே தயாரிக்கப்படுகிறது. இதை உங்கள் இடத்தின் அளவு மற்றும் பட்ஜெட்டில் உங்கள் விருப்பத்திற்கேற்ப அலங்காரப் பொருட்களால் அவற்றை வடிவமைக்கவும்.

3. மதிப்பூட்டப்பட்ட  தோட்டக்கலை கருவிகள் (Upcycled Planters): பாரம்பரியமாகப் பாதுகாத்து வரும் நமது முன்னோரின் பழைய ஜாடிகள், தகர டப்பாக்கள் அல்லது மரப் பெட்டிகளை அழகான தோட்டக்கலை கருவிகளாக மாற்றலாம். உங்கள் உட்புற பாணிக்கு ஏற்ப அவற்றை அக்ரிலிக் வண்ணம் தீட்டி அல்லது உங்கள் கற்பனையில் அலங்கரிக்கவும். அவற்றை மண்ணால் நிரப்பி, உங்களுக்குப் பிடித்த தாவரங்கள் அல்லது சதைப்பற்றுள்ள தாவரங்களை வளர்த்தால் அறையின் 'லுக்' சூப்பராக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உண்மையான மன வலிமைக்கான ரகசியம்: மற்றவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத 6 விஷயங்கள்!
living room decoration

4. கையால் செய்யப்பட்ட தலையணைகள் (Handmade Throw Pillows): அழகான சோபாக்கள் நிச்சயமாக அறைக்கு அழகுதான். ஆனால், கையால் செய்யப்பட்ட அல்லது கடைகளில் வாங்கிய கண்கவர் குஷன்களை சோபாவின் வடிவத்திற்கேற்ப வைக்கும்போது மேலும் அறை அழகு கூடிவிடும். துணி கட் அவுட்களை தைக்க பழைய துப்பட்டாக்கள், சேலை பார்டர்கள் அல்லது பாரம்பரிய அச்சுகளுடன் கூடிய துணி துண்டுகளைப் பயன்படுத்தினால் மலிவாகவே நமது குஷன்களைத் தயாரித்து குஷியாக அதில் அமரலாம்.

5. மேக்ரேம் தோட்டக்கலை கருவிகள் அல்லது சுவர் தொங்குதல்கள் (Macramé Plant Holders or Wall Hangings): தொங்கும் தாவர அலங்கார ஜாடிகள் அல்லது கலைநயமிக்க சுவர் ஹேங்கர்களை உருவாக்க பருத்தி கயிறு அல்லது தடிமனான டிவைன் நூலைப் பயன்படுத்தவும். சுதந்திரமான சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் இயற்கையுடனான தொடர்பை வெளிப்படுத்தும் தனித்துவமான, கலைநயமான போஹேமியன் DIY திட்டம் உங்கள் சுவர்களுக்கு அழகையும் மனதிற்கு அரவணைப்பையும் தருகிறது. லிவிங் ரூமின் கருப்பொருளுக்கு ஏற்றவாறு உங்கள் கற்பனையில் உருவாக்கி மகிழலாம்.

இவற்றுடன் போட்டோ கேலரி, வண்ணக் கம்பளங்கள், மலர்க் கிண்ணங்கள், திரைச்சீலைகள், அழகிய மர நாற்காலிகள் உள்ளிட்ட பல பொருட்களில் நாம் கவனம் வைத்து அலங்கரித்தால் அறை அசத்தலாக வருபவரை அசர வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com