

நமக்கு தெரிஞ்ச ஒருத்தரு நம்மகிட்ட பேசாம போவாரு. அதுக்கு நாம எந்த விதத்திலயும் காரணமா இருந்திருக்க மாட்டோம். அவருக்கு நம்ம மேல வெறுப்பு வந்திருக்கும். அந்த வெறுப்பு வர காரணமா நம்மகிட்ட இருக்கிற 5 ஸ்பெஷல் குணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பொறாமையை தூண்டும் நற்குணங்கள்
தன்னம்பிக்கை, ஒழுக்கம், திறமை போன்ற உங்களின் நற்குணங்கள் மற்றவர்களின் பலவீனங்களை ஞாபகப்படுத்துவதாக "நம்மால் இவ்வாறு இருக்க முடியவில்லையே" என்ற ஏக்கம் மற்றும் பொறாமையை தூண்டலாம். இந்த சோசியல் கம்பேரிசன் (Social Comparision) காரணமாக உங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதால் மற்றவர்களுக்கு உங்களை பிடிக்காமல் போகிறது.
பிடிக்காமல் போகும் தனிப்பட்ட எல்லைகள்
மற்றவர்கள் சொல்வதை நீங்கள் கேட்காமல் அந்த இடத்தில் உங்களின் சுயமரியாதைக்காக 'நோ' சொல்கிறபோது அவர்களுக்கு கோபம் ஏற்பட்டு உங்களை பிடிக்காமல் போகிறது. 'ஆரோக்கியமான எல்லைகளை' வகுத்துக்கொண்டு சுயமரியாதைக்காக யார் என்ன கூறினாலும் 'நோ' சொல்லும்போது கோபம் வெறுப்பாய் மாறி உங்களை பிடிக்காமல் போகிறது.
தவறுதலான தவறான பிம்பம்
உங்களிடம் பழகி பேசி நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதை தெரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு உங்களைப் பற்றி வேறு விதமாக கற்பனை செய்துகொள்ளும் நபர்களுக்கு உங்களை பிடிக்காது. இதற்காக நீங்கள் உங்களை அவரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவர்கள் வெறுப்பது உங்களுடைய' கற்பனை கதாபாத்திரத்தை' என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
ஒத்துப்போகாத குணாதிசயங்கள்
அனைவருக்கும் ஒரே மாதிரி எண்ணங்களும் குணங்களும் இல்லாமல் சிலரது பேச்சு முறை, சிந்தனை ,நகைச்சுவை உணர்வு போன்றவை உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். அதேபோல மற்றவர்களுக்கு உங்களது நடை, உடை, பாவனை, ஸ்டைல் குணாதிசயங்கள் பிடிக்காமல் இருக்கலாம். இதில் யார் மீதும் தவறு சொல்ல முடியாது. ஏனெனில் 'குணாதிசய முரண்பாடே' இதற்குக் காரணம்.
தனிப்பட்ட வெறுப்பு பிடிக்காமல் போகச் செய்யும்
சிலருக்கு கடந்த காலத்தில் அவரது குடும்பத்திலோ அல்லது பணியிடத்திலோ மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கோபத்தையும் சந்தித்து யாரிடமும் வெளிக்காட்டாமல் மன அழுத்தமாக உருவாகி இருக்கும். அப்பொழுது எதிர்பட்ட நபரிடம் அந்த வெறுப்பை காண்பிப்பார்கள்.
மற்றவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றாலும் உங்களது தகுதி குறைந்துவிடப் போவதில்லை. நீங்கள் தவறானவர் என்ற எண்ணம் ஏற்பட வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் மற்றவர்களுக்கு உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை ஆகவே உங்கள் மீது அன்பு செலுத்தி நட்பு பாராட்டும் மனிதர்களிடம் பழகி நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ளுங்கள்.