வீடு எப்போதும் அழகாகவும், நமது உள்ளமும், உடலும் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்க, காலையில் வெளியே சென்றவர்கள் மாலை வீடு திரும்பி வரும் போது அவர்களின் மனநிலை நல்ல உற்சாகமாக இருக்க, வீடு எப்போதும் நல்ல நறுமணமாக இருக்க 5 டிப்ஸ்...
1. ஒரு கிண்ணத்தில் ஒரு டம்ளர் நீரில் 2 ஸ்பூன் பன்னீர், 4 சிட்டிகை ஜவ்வாது, நல்ல வாசனை திரவியம், ரோஸ் வாட்டர் 2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து வீட்டின் அனைத்து இடங்களிலும் தெளித்து விட வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு முறை அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் வீடு எப்போதும் நறுமணமாக இருக்கும்.
2. ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சோடா உப்பு இரண்டு மூடி துணி துவைக்க பயன்படுத்தும் கம்ஃபட், நன்றாக தூள் செய்யப்பட்ட ஆறு கற்பூரம் மற்றும் இரண்டு ஸ்பூன் கிளியர் க்ளூ, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். இதை ஒரு பிளாஸ்டிக் டீ கப்பில் ஊற்றி 2 நாட்கள் நன்றாக காய வைத்து கட்டியானவுடன் ஒரு சிறிய ஓடானில் டப்பாவில் போட்டு வைக்கவும். வீட்டில் எங்கு வாசனை தேவையோ அந்த இடத்தில் மாட்டி வைத்தால் குறைந்த 15 நாட்கள் வீட்டிற்கு நல்ல வாசனையைத் தரும்.
3. ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சோடா உப்பு, கம்ஃபட் 2 ஸ்பூன் இரண்டையும் நன்றாக பசை போன்று கலந்து ஒரு வலை போன்ற துணி வைத்து அதன்மீது மூடி ஒரு ரப்பர் பேண்ட் போட்டு மூடி அதனை வீட்டில்அலமாரி, ஷோகேஸ் போன்ற இடங்களில் வைத்துவிடுங்கள். அந்த இடம் முழுவதும் மிகவும் வாசனையாக இருக்கும்.
4. ஒரு பாட்டிலில் ஒரு ஸ்பூன் சோடா உப்பு , ஜவ்வாது ரெண்டு சிட்டிகை ஒரு ஸ்பூன் வாசனை திரவியம் மூன்றையும் சேர்த்து நன்றாக குலுக்கிவிட்டு, பாட்டிலின் வாயில் ஒரு வலை துணியைக் கட்டி, ரப்பர் பேண்ட் போட்டு மூடிவிட்டு, துணி வைக்கும் அலமாரி, பீரோவில் வைத்து விட்டால் போதும் உங்கள் அலமாரி, பீரோ எப்போதும் வாசனை நிரம்பியதாக இருக்கும்.
5. ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சோடா உப்பு ,இரண்டு ஸ்பூன் வாசனை திரவியம் இரண்டையும் நன்றாக பசை போன்று கலந்து ஒரு வலை போன்ற துணி வைத்து அதன் மீது மூடி ஒரு ரப்பர் பேண்டை போட்டு மூடி வீட்டின் ஹால், சோபா பக்கத்தில், பெட் ரூம் பக்கம் என வைத்து விடுங்கள். அந்த இடம் முழுவதும் மிகவும் வாசனையாக இருக்கும். வீடே மணக்கும்.